பழைய வாகன அழிப்பு கொள்கையை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி...

பழைய வாகன அழிப்பு கொள்கையின் கீழ் உள்கட்டமைப்பு வசதியை  ஏற்படுத்திக்கொடுக்க  இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 
பழைய வாகன அழிப்பு கொள்கையை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர்  மோடி...
Published on
Updated on
1 min read

குஜராத்தில் முதலீட்டார்கள் மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வாகன அழிப்பு கொள்கையை முதலீட்டாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது, பழைய வாகன அழிப்பு கொள்கை இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில்  முக்கிய மைல் கல்லாக இருக்கும் என மோடி தெரிவித்தார்.  

இந்த கொள்கையின் கீழ் வாகனங்களை அழிப்பதற்கான உள்கட்டமைப்பு ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்த அவர், இதில் முதலீடு செய்ய இளைஞர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்குவோர் முன்வர வேண்டும் என கோரினார். இதன்மூலம் தேவையற்ற வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு, ஆட்டோமொபைல் உள்ளிட்ட அனைத்து துறையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com