உலகம்செய்திகள்

பிளாஸ்டிக் பாட்டில்களில் கடத்தப்பட்ட கிளிகள்..கீச் கீச் சத்தத்தில் போலீஸ் கண்டுபிடிப்பு

 

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியான பப்புவாவில் , கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் பிளாஸ்டிக் பாட்டிலில் கிளிகள் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

கப்பலில் இருந்தவர்களுக்கு ஏதோ ஒரு சத்தம் கேட்டுள்ளது.எனவே விலங்குகள் தான் கடத்தப்படுகிறது என நினைத்து பெட்டியை திறந்து பார்த்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டில்களில் 64 உயிருள்ள கிளிகள் மற்றும் 10 இறந்துபோன கிளிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மேலும் இந்த கிளிகள் எங்கே கடத்தி செல்லப்பட இருந்தது என்பது இதுவரை தெரியவில்லை.மீட்கப்பட்ட பறவைகள் நியூ கினி மற்றும் தென் மேற்கு பசிபிக் பெருங்கடல் தீவுகளில் காணப்படும் black-capped lories என்ற வகையை சேர்ந்த கிளிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள பறவை சந்தைகளில் பறவைகள் விற்கபடுவதோடு, வெளிநாடுகளுக்கும் இது போன்று அடிக்கடி சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button