உலகம்

செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் – இந்திய பெண்ணுக்கு குவியும் பாராட்டு

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் விண்கலத்தின் பயணத்திற்கு இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் சுவாதி மோகனுக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

இந்த திட்டத்தில் இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி, டாக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளது.செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு வாகனத்தை அனுப்பும் இந்த திட்டம், 2013ல் துவங்கியதில் இருந்தே அதில் ஈடுபட்டு வந்தார் சுவாதி.

ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார்.ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கினார் சுவாதி மோகன்.மேலும் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய போது அதன் ஒவ்வோரு செயல்பாடுகளை கண்காணித்து வந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவாதி மோகன் தன் ஒரு வயதிலே அமெரிக்கவுக்கு சென்றார்,குழந்தைகள் மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசையை,ஸ்டார் டிரெக் நிகழ்ச்சியை பார்த்து விண்வெளி ஆய்வில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். நாசாவின், சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

Related Articles

One Comment

  1. I simply could not go away your web site before suggesting that I extremely enjoyed the usual information a person supply to your visitors? Is going to be back incessantly in order to check out new posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button