செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது ‘பெர்சவரன்ஸ் விண்கலம்’

நாசாவின் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.
செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர்.
செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.இந்த விண்கலத்தில் உள்ள ரோவர், செவ்வாய் கிரகத்தில் இறங்க இருந்ததால் நாசா விஞ்ஞானிகள் மிகவும் பரபரப்புடன் இருந்தனர்.
மேலும் இந்த நிகழ்வை அமெரிக்கா மட்டுமில்லாது இந்தியா, உள்பட பல உலக நாடுகள ஆர்வமுடன் எதிர்பார்தது காத்திருந்தனர்.இந்த நிலையில் நள்ளிரவு செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.இந்த வெற்றியை நாசா விஞ்ஞனிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.தரையிறங்கிய சில நிமிடங்களிலே பெர்சவரன்ஸ் விண்கலத்தின் ரோவர் செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை அனுப்பியது.இதனை நாசா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Some really good info , Gladiola I noticed this. “If you don’t make mistakes, you aren’t really trying.” by Coleman Hawking.