கள்ளக்குறிச்சிகவர் ஸ்டோரிகிரைம்தமிழ்நாடுவிழுப்புரம்

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் மோசடி – அதிகாரிகள் சஸ்பெண்ட், ஊழியர்கள் டிஸ்மிஸ்

நாடு முழுவதும் 2 ஹெக்டேர்கள் வரை விவசாயம் செய்யக்கூடிய நிலம் வைத்திருப்பவர்களுக்கு, பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 ரொக்கம்  வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின்படி நிதிஉதவி பெற  மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

இதற்காக மத்திய அரசு  ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் சுமார் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.  முதல் தவனை மார்ச் 31க்குள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும், ஆனால் 2வது தவணைக்கு ஆதார் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயனாளிகளைச் சேர்க்க சில மாதங்களுக்கு முன் தளர்வு அளிக்கப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. விவசாயிகள் அல்லாதோரும் திட்டத்தில் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாகவும் செய்திகள் பரவின. முறைகேடு தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் உதவி இயக்குநர்கள் அமுதா, ராஜசேகரன், விழுப்புரம் மாவட்டம் வல்லம் வேளாண்துறை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முறைகேடு தொடர்பாக 7 வட்டார தொழில்நுட்ப ஊழியர்கள், பயிர் அறுவடை பரிசோதகர்கள் என 13 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button