கவர் ஸ்டோரி

அதிமுக – பாமக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ராமதாஸ் தான் அறிவிப்பார்!

பாமகவின் இந்த கருத்து  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து விட்டு, ஒரு கட்டத்தில், பார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது, திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது, பெற்ற தாயோடு உறவு வைத்ததற்கு சமம், இனி ஒரு போதும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது, வேண்டுமானால் பத்திரத்தில் எழுதித் தருகிறேன் என அறிவித்த ராமதாஸ், அடுத்த சில ஆண்டுகளில், திராவிட கட்சியான அதிமுகவுடன்  கூட்டணி வைத்தது, அக்கட்சித் தொண்டர்களை மட்டுமின்றி, தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் தானே தவிர, அதிமுக – பாமக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அல்ல என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள், தேர்தல் நேரத்தில் தான்,  இது குறித்து அறிவிப்பார் எனவும் பாமக தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி இளவரசன் திவ்யா திருமணத்தை தொடர்ந்து, எழுந்த கலவத்திற்கிடையே, 2014 மக்களவைத் தேர்தலில், தேமுதிக, மதிமுக போன்ற திராவிட கட்சிகளுடன், தேசிய கட்சியான பாஜகவுடனும் கூட்டணி வைத்து, தேர்தலை சந்தித்தது பாமக. தர்மபுரியில் அன்புமணி வெற்றி பெற்றார்.

இது மக்களவைத் தேர்தல் எனவே தான் கூட்டணி, சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி தான் பாமகவின் முதலமைச்சர் வேட்பாளர் எனக் கூறி, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கம் அடங்கிய சுவரொட்டிகள் மூலம் தனித்து தேர்தலை சந்தித்து, ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் பாமக படுதோல்வியை தழுவியது.

இதனையடுத்து கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட கட்சியான அதிமுகவின் கூட்டணியில் பாமக இணைந்ததோடு, பரம எதிரியாக கருதப்பட்ட, தேமுதிக உடனும் கைகோர்த்தார் ராமதாஸ். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக கூட்டணியும் படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பாமக  கூட்டணி வைக்கப் போகிறதா, அல்லது தனித்து நிற்கப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அதிரடியாக அறிவித்துள்ளது. இது அதிமுகவின் சொந்த முடிவு என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை நாங்கள் தான் அறிவிப்போம் என பாஜக கூறி வருகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில் பாமகவும் மூக்கை நுழைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் தான், அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அல்ல என பாமக தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் இதுகுறித்து ராமதாஸ் தான் அறிவிப்பார் என்றும் ஜிகே மணி தெரிவித்திருக்கிறார். பாமகவின் இந்த கருத்து  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

8 Comments

 1. When I originally commented I clicked the “Notify me when new comments are added” checkbox
  and now each time a comment is added I get three e-mails with the same comment.
  Is there any way you can remove me from that service?
  Thank you!

 2. Hey There. I discovered your blog the usage of msn. That is a really neatly written article.
  I’ll be sure to bookmark it and return to read more of
  your useful info. Thanks for the post. I’ll definitely return.

 3. Hi there! I just wanted to ask if you ever have any trouble with hackers?
  My last blog (wordpress) was hacked and I ended up losing
  a few months of hard work due to no data backup.
  Do you have any methods to prevent hackers?

 4. My programmer is trying to convince me to move to .net from PHP.
  I have always disliked the idea because of the expenses.
  But he’s tryiong none the less. I’ve been using WordPress on several websites for about a year and am concerned
  about switching to another platform. I have heard fantastic
  things about blogengine.net. Is there a way I can import all my wordpress content into it?

  Any help would be greatly appreciated!

 5. Very great post. I just stumbled upon your weblog
  and wished to say that I’ve truly loved browsing your blog posts.
  In any case I will be subscribing for your feed and I
  hope you write again very soon!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button