தமிழ்நாடுபுதுக்கோட்டை

கவிஞர் சினேகன் கார் மோதி விபத்து – சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு !

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளர் கவிஞர் சினேகனின் கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அருண் பாண்டி என்பவர் உயிரிழந்தார்.

கடந்த 15 ஆம் தேதி புதுகோட்டை மாவட்டம் ஊனையூரிருந்து திருமயம் நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது கவிஞர் சினேகன் ஓட்டி சென்ற கார் மோதியது.இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அருண்பாண்டி என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சினேகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டிருந்த அருண்பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து கவிஞர் சினேகன் மீது வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், உயிரிழந்த அருண்பாண்டி உடலை அவரது உறவினர்களுடன் ஒப்படைக்க உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button