கவர் ஸ்டோரிதமிழ்நாடுதூத்துக்குடி

சிக்கலில் சிக்கிய காவல்துறை – பள்ளி ஆசிரியரை கடத்தி சென்று 4.50 லட்சம் ரூபாயை பறித்த காவல் துறை;

சாத்தான்குளம் ஜெயராஜ் -பென்னிக்ஸ் சம்பவத்தை போல் மற்றுமொரு நிகழ்வு :- பள்ளி ஆசிரியரை கடத்திச்சென்று ரூ4.50 லட்சம் பறித்த காவலர்கள்

நாசரேத் அருகே உள்ள குப்பாபுரம் ஊரை சேர்ந்தவர் சாலமோன்(வயது52). இவர் தனது மனைவி, மகன், தகப்பனார் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அரியநாயகிபுரம் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

சாலமோனின் சகோதரர் சினிமா துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திரைப்பட இயக்குனர் சிவக்குமார் நாயர் என்பவருக்கும் இடையே தொழில் ரீதியாக பண பிரச்சனை இருந்து வந்துள்ளது.

நீண்ட நாட்களாக இருந்து வந்த இந்த பிரச்சனையில் தீர்வு எட்டப்படாததால் சாலமோனை கடத்தி அவருடைய சகோதரரிடம் இருந்து பணம் பறிக்கலாம் என இயக்குனர் சிவக்குமார் நாயர் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்காக சென்னை வளசரவாக்கம் காவல் துறையினர் உதவியுடன் சாலமோனை தேடி வந்துள்ளனர். இந்தநிலையில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக சாலமோன் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்த அவர் 23-10-2020 அன்று திருமணம் முடிந்து மாலை திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவரது உறவினர்கள் மூலம் சாலமோனை ஊருக்கு வெளியே தனியே சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் வரவழைத்துள்ளனர்.

தொடர்ந்து போலீசார் வந்த வாகனத்தில் சாலமோனை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்று மிரட்டி ரூ.4.50 லட்சம் பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது.

சாலமோனை அழைத்து சென்றது குறித்து அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் போலீசார் எவ்வித தகவலும் கொடுக்கவில்லை என தெரிகிறது. பாதிக்கப்பட்ட சாலமோன் இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

ஆனால் அவரின் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் காலம் தாழ்த்தி வந்துள்ளனர் இதனால் விரக்தியடைந்த அவர் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நீதி கேட்டு வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சாத்தான்குளம் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.வழக்கை ஏற்று விசாரணை நடத்திய சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு புகார்தாரரின் மனுவின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் அதன்பிறகும் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில் சாலமோனின் உயிருக்கு மிரட்டல் விடும் வகையில் வளசரவாக்கம் போலீசார் நடந்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,

சாமி நாயர் மகன் சிவக்குமார் நாயர் இருந்துள்ளார் மேலும் வளசரவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அமுதா உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் நான்கு காவலர்கள் இருந்துள்ளார்கள்.

சென்னை வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் அமுதா, உதவி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், உள்ளிட்ட 4 போலீசார் சிவக்குமார் நாயர் என்பவருக்காக அடியாளாக செயல்பட்டு எந்தவித தேவையும் இல்லாமல் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கின்ற என்னை கடத்தி சாத்தான்குளம் வழக்கில் போலீசார் எவ்வாறு செயல்பட்டார்களோ அதே போல் நடந்து என்னிடமிருந்து எந்தவித தேவையும் இல்லாமல் ரூ.4.50 லட்சம் அபகரித்து விட்டு பொய்வழக்கு போடுவோம் என மிரட்டி உயிருக்கு பயத்தை ஏற்படுத்துகின்றனர்.

இது குறித்து தொடர்ந்து காவல் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதில் இந்த வழக்கை சம்பந்தப்பட்ட அனைத்து போலீசார் மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி ஆணை பிறப்பித்தும், இன்னும் சம்பந்தப்பட்ட போலீசார் மீதுஎவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அவர்கள் பணியிடை நீக்கம் செய்து அவர்கள் மீது துறை ரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலமோன் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வழக்கறிஞர் பேசுகையில், இவருடைய சகோதரர் மீது உள்ள வழக்கைச் சொல்லி எந்தவித தேவையும் இல்லாமல் இவரிடம் இருந்து பணத்தை பறித்து விட வேண்டும் என்ற நோக்கில் திருமண வீட்டில் கலந்துகொண்டவரை சென்னைக்கு கடத்தி போய் விட்டார்கள்.

Related Articles

27 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button