தொடர் கனமழை காரணமாக ஆந்திராவின் சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. நேற்று மாலை முதல் அது தொடர் மழையாக மாறி அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் திருப்பதியில் உள்ள சிவஜோதி நகரில் கால்நடைகள் அடித்து இழுத்து செல்லப்பட்டன.
கடப்பா, திருப்பதி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒருவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. திருப்பதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் மழை வெள்ளம் இழுத்துச் சென்றது. இது போன்ற அதிகன மழை இதற்கு முன்னர் எப்போதும் பெய்ததில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
திருப்பதி நகரில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ளத்திற்கு நகரை சுற்றி இருந்த ஏரிகள், குளங்கள் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.