கொரோனா காலப்போக்கில் சாதாரண சிறுவயது வியாதியாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொடர்பாக ஆய்வு கட்டுரை ஒன்றினை நார்வேயில் உள்ள ஆஸ்லோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் மரபணு மாறிய புதிய வைரஸ்களால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்றும், ஆனால் அவர்கள் மீது வைரஸின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சீனா, ஜப்பான், தென்கொரியா அமெரிக்க, இத்தாலி போன்ற நாடுகளின் தொற்று பாதித்தோரின் பட்டியலை பயன்படுத்திக் கண்டறிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாது 1889களில் பாதிப்பை ஏற்படுத்திய ரஷ்யன் ப்ளூ, சார்ஸ் வைரஸ்கள் போன்று, இவை வருகிற சில ஆண்டுகளில், சாதாரண காய்ச்சலாக மாறிவிடும் என கூறியுள்ளனர்.
இருப்பினும் முறையான தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், உயிரிழப்பு எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை என எச்சரித்துள்ளனர்.