
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கொடைக்கானல் பகுதியில், ஆய்வு மேற்கொண்டார். அத்துடன், கொடைக்கானல் காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய ஐந்து காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இந்நிலையில், ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸ் நடத்தப்படுகிறது. இதனால், நடை பயிற்றி, சைக்கிளிங் செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு, ஆபத்தை ஏற்படுத்தும், வகையில், பைக் ரேஸ் நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக பொதுமக்கள் அளித்து புகாரின் பேரில் பைக் ரேஸ் நடத்துபவர்களை கண்காணிக்கும் வகையில், ஏரிச்சாலை முழுவதும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் கூறினார்.