ரீல்ஸ் செய்வதாக கூறி பூங்காவுக்கு அழைப்பு... சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் கைது...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோணம்காடு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி இரணியல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தாய் தந்தையை இழந்த சிறுமி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் கடந்த ஜூன் 8-ம் தேதியன்று மாயமானார். பல்வேறு இடங்களுக்கு சென்று பேத்தியை தேடிப் பார்த்த மூதாட்டி, குளச்சல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் சிறுமி மணவாளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் சென்றது. பின்னர் அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுமிக்கு காட்டாந்துறை பகுதியைச் சேர்ந்த சிஜின் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் பேசிப் பழகிய சிஜின், தக்கலை அருகே உள்ள பூங்காவுக்கு சிறுமியை அழைத்தார்.
அங்கு ரீல்ஸ்-சில் ஈடுபடலாம் என கூறியவர், சிறுமியை பலாத்காரம் செய்தார். இதனால் அச்சமடைந்த சிறுமி உறவினர் வீட்டுக்கு சென்று தஞ்சமடைந்தார்.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிஜினை கைது செய்த போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.