ஆஸ்திரியா நாட்டில் கொட்டி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆல்பைன் மாகாணத்தில் பெய்த மழையால் தலைநகர் வியன்னாவின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. சாலைகள் சேதமடைந்ததோடு ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளிக் கிழமை பெய்த மழையால் செயிண்ட் ஆண்டன் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.