வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் அரசுக்கு எதிரான போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தது. கடந்த ஒரு மாதத்தில் போராட்டத்திற்கு 300 பேர் பலியான நிலையில், நேற்று நடந்த கலவரத்தில் 100 பேர் வரை உயிரிழந்தனர். இந்த நிலையில், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து சிலர் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டும், ஒரு சிலர் மேஜை மீது ஏறி நின்றும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.