அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 20%எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை ஆரம்பமாம்..!

10% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையில் ஜூன் மாதமே இலக்கை அடைந்துவிட்டதாக மத்திய அமைச்சர் பெருமிதம்..!

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 20%எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை ஆரம்பமாம்..!

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்பட உள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை இந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்ததாகவும், ஆனால், ஜூன் மாதமே இலக்கை நிறைவேற்றி விட்டதாகவும் தெரிவித்தார். இதேபோல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல், சில குறிப்பிட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.