4500 கோடி சொத்துமதிப்பு.. அதிமுகவை கைப்பற்ற இவர்கள் முட்டிமோத காரணம் இது தான்.! 

4500 கோடி சொத்துமதிப்பு.. அதிமுகவை கைப்பற்ற இவர்கள் முட்டிமோத காரணம் இது தான்.! 

ஜெயலலிதா மரணத்திற்கு பின் அதிமுகவில் சசிகலா ஆதிக்கம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தனை அதிமுக தலைவர்களும் சசிகலாவிடம் வந்து தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்கும் வீடீயோக்களும் வெளியானது. மேலும் சசிகலா முதல்வராகவேண்டும் என்றும் அதிமுக தலைவர்கள் கூறினார்கள். அதன் தொடர்ச்சியாக பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து மெரீனாவுக்கு சென்று தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். 

தர்மயுத்தத்தை தொடர்ந்து பன்னீர்செல்வம் பின்னால் சில அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் அணிதிரள ஆரம்பித்தார்கள். அதோடு பன்னீர்செல்வத்திற்கு பாஜகவின் ஆதரவும் இருப்பது வெளிப்படையாக தெரிந்தது. ஆனால், எப்படியும் முதல்வராக வேண்டுமென்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் திரட்டிய சசிகலாவால் கடைசிவரை முதல்வராக முடியாமல் போனது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல வேண்டிய கட்டாயம் வந்ததால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி விட்டு சிறை சென்றார்.  

அதன்பின் தினகரன் தலைமை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்று தொடர்ந்து அதிமுகவில் சலசலப்பு  ஏற்பட்டு வந்தது. பின் பாஜகவின் நேரடி தலையீடால் தினகரன் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் ஓரம்கட்டப்பட்டு எடப்பாடி மற்றும் பன்னீரசெல்வம் ஒன்றாக இணைந்தார்கள். கட்சி இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பது போல அதிமுக தலைமை பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் மறைமுக பனிப்போரில் ஈடுபட்டு வந்தார்கள்.

அதன்பின்னர் தண்டனை காலம் முடிந்து சசிகலா வெளியே வந்தார். வந்தவர் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்று அறிவித்த அவர் சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுகவை கைப்பற்றுவேன் என தொண்டர்களிடம் பேசி மீண்டும் அரசியலில் இறங்குவது பற்றிய தன் முடிவை வெளிப்படுத்திவருகிறார். இப்படி தற்போதைய நிலையில் அதிமுக தலைமை பொறுப்புக்காக மூன்று பேர் போட்டிபோட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், இப்படி இவர்கள் அதிமுக தலைமைக்கு போட்டியிட காரணம் அதிமுகவின் சொத்துக்களை தன் கட்டுப்பாட்டில் வைக்கவே என்றும் சொல்லப்படுகிறது. தற்போதைய நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ சொத்துமதிப்பே 4500 கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களே அந்த சொத்துக்களை கையாள முடியும். இதன் காரணமாகவே அதிமுகவின் தலைமைக்கு இப்படி இவர்கள் போட்டிபோடுகிறார்கள் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.