ரெய்டுக்கு ரெடியாகும் ஆபீஸர்ஸ்... லிஸ்டில் முதல் ஆளே வேலுமணிதான்... பயத்தில் பாஜகவுக்கு தாவும் மஞ்ச சட்டை மாஜி!!

ரெய்டுக்கு ரெடியாகும் ஆபீஸர்ஸ்... லிஸ்டில் முதல் ஆளே வேலுமணிதான்... பயத்தில் பாஜகவுக்கு தாவும் மஞ்ச சட்டை மாஜி!!

தமிழகத்தில் கொரொனா தொற்றை குறைப்பதற்கு ஆளும் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. இதுஒருபுறம் இருந்தாலும், முன்னாள் ஆளும் அரசான அதிமுக மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டம்மி ஆக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சைலண்ட்டாக காய்நகர்த்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்துள்ள அமைச்சர்கள் மீதும், அவர்களுக்கு துணையாக நின்றவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என சொல்லிக்கொண்டே இருந்தார் மு.க.ஸ்டாலின். தற்போது அவர் சொன்னது போலவே திமுகவும் ஆட்சியை பிடித்துவிட்டது.

ஆனால் தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், முன்னாள் ஊழல் அமைச்சர்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் கொஞ்சம் தள்ளிப்போய்வுள்ளது. ஆனாலும், இதுகுறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

அதிலும், இந்த பட்டியலில் முதலில் இருப்பது தற்போதை எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி தான் என்கின்றனர் திமுக வட்டாரங்கள். மேலும் அவர் செய்த ஊழல்களை வெளிக்கொண்டுவரத்தான் மேற்கு மண்டல ஐஜியாக "ஸ்ட்டிரிக்ட்" சுதாகரை நியமித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோலவே, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு ஐஜியை பார்த்து பார்த்து நியமனம் செய்துள்ளது திமுக தலைமை. இந்த பட்டியலில், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி. உதயகுமார், அமைதி அமைச்சரான விஜயபாஸ்கர் என பட்டியல் நீள்கிறது.

இந்த பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்க ஒரு தனி டீமேவுள்ள நிலையில், மற்றொரு பக்கம் உளவுத்துறையும் இறங்கி உள்ளது. இதனால் கதி களங்கி போயுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாதுகாப்பு காரணமாக தேசிய் கட்சிக்கு தாவவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இனி அதிமுக-வில் இருந்து முக்கிய பிரமுகர்கள் தங்களையும் சொத்துக்களையும் காத்துக்கொள்ள தேசிய கட்சிக்கு மாறினால் அது ஆச்சரியப்படுவதற்கு ஒன்னுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.