சசிகலா தலைமையில் அதிமுக..!

சசிகலா தலைமையில் அதிமுக..!

அதிமுகவில் பல குழப்பங்கள் நிகழ்த்து வரும் வேளையில், சசிகலா, அதிமுகவை கைப்பற்றுவதில் தன்னுடைய அடுத்த நகர்வு என்ன எனபதை பதிவு செய்துள்ளார்.

பியஸ் - ஓ பிஎஸ் - சசிகலா:

அதிமுகவை கைப்பற்றுவதில் பிஎஸ் - பிஎஸ் இடையே பலத்த போட்டி நிலவி வரும் வேளையில், சமீப காலமாக இந்த போட்டி ஈ பிஎஸ்- ஓ பிஎஸ்+ சசிகலா என மாறியுள்ளது. அதற்கு உதாரணம் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக கூட்டணியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தேவர் கூட்டமைப் பின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஓ. பன்னீர்செல்வத்திற்கும், வி.கே சசிகலாவுக்கும் தனித்தனியாக கடிதம் அனுப் பியது தான்.

தேவர் கூட்டமைப் பின் கடிதம்:

கடந்த காலங்களில் அதிமுகவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய சமுதாயம் தேவர் சமுதாயம் எனக் குறிப் பிட்டு,  தங்களுடைய ஒட்டுமொத்த கோரிக்கையை ஏற்று சசிகலா, பிஎஸ் இருவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தனித்தனியாக கடிதம் எழுதிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கடிதத்தில் 50க்கும் மேற்பட்ட தேவர்  கூட்டமைப் பின் தலைவர்கள் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் கூறப்படுகிறது. 

பிஎஸ்+சசிகலா சாத்தியமா?

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கும் நிலையில், தேவர்கள் கூட்டமைப் பின் தலைவர்கள் எழுதிய கடிதத்தை ஏற்று, அதிமுகவை கைப்பற்றுவதற்காக சசிகலாவிடம் கூட்டணி வைப்பாரா பிஎஸ்? அல்லது இந்த கடிதத்தை ஒரு ட்ரம்ப் காடாக வைத்து ஓ. பி.எஸ்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவை கைப்பற்ற சசிகலா திட்டம் வகுப்பாரா? என்று அரசியல் வல்லுனர்கள் சந்தேகம் எழுப் பி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து உள்ளார் சசிகலா.

காலப்போக்கில் அனைத்தும் சரியாகி விடும்:

பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து விட்டு செய்தியாளர்களுக்கு போட்டி அளித்த சசிகலா, நான் ஈ பிஎஸ் பாகமோ பிஎஸ் பக்கமோ இல்லை. அதிமுகவில் தற்போது நிகழும் சூழ்நிலைகள் காலப்போக்கில் சரியாகிவிடும்.

எனது தலைமையில் அதிமுக:

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் இது போன்ற நிகழ்வு நடந்தது. பின்னர் அனைவரும் ஒன்றாக இணைந்தனர். அதுபோல மீண்டும் நாக்கும். தொண்டர்கள் நினைப்பது தான் எனது செயல்பாடாக இருக்கும். எனது பயணத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தொண்டர்கள் விருப்பப்படி எனது தலைமையில் அதிமுக மீண்டும் இணைய நிச்சியமாக வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளார்.

பிஎஸ், சசிகலாவுடன் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவரும் இந்நிலையில், சசிகலாவின் இந்த பேச்சு அரசியல் விமர்சர்களிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.