தண்ணீர் அவசியம் குறித்து 8 வயது சிறுமி சைக்கிளில் சென்று விப்புணர்வு ஏற்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம்..!

அனைத்து உயிர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது தண்ணீர் ஆகும். தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாப்படுகின்றது.

தண்ணீர் அவசியம் குறித்து 8 வயது சிறுமி சைக்கிளில் சென்று விப்புணர்வு ஏற்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம்..!

செங்கல்பட்டு அருகே தண்ணீரின் அவசியம் குறித்து 8 வயது சிறுமி சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்சியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலா. இவரின் 8-வயது மகளான ஜெய்மதி பாலா அங்குள்ள தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சேமிப்பதன் அவசியம் குறித்து அப்பகுதி மக்களிடையே விழப்புணர்வை ஏற்படுத்தினார். கொளவாய் ஏரியில் இருந்து 10-லிட்டர் கொண்ட கேனில் நீரை எடுத்துக்கொண்டு சுற்று வட்டார பகுதிகளில் சைக்கிளில் சென்று தண்ணீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.