எடுபடாத சசி ஆடியோ ப்ளே.. காலியாகும் அமமுக!! ரியாக்ஷனே இல்ல இங்க... என்னதான் நடக்குது அங்க?

சசிகலாவின் ஆடியோ முயற்சிக்கு வந்த ஆபத்து..!

எடுபடாத சசி ஆடியோ ப்ளே.. காலியாகும் அமமுக!! ரியாக்ஷனே இல்ல இங்க... என்னதான் நடக்குது அங்க?

சிறைவாசம் முடிந்து கெத்தாக வெளியில் வந்த சசிகலாவை பார்த்து அதிமுக அஸ்திவாரமே அதிர்ந்து போன நிலையில், எப்படியும் நிலுவையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் வழக்கை முடித்து மீண்டும் அதிமுகவை கைப்பற்றி ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் சசிகலா. 

தேர்தலில் அதிமுக தோல்வியுற்ற நிலையில், பலரும் இந்நேரம் சசிகலா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்த நேரத்தில், மீண்டும் அதிரடியாக அமமுக மற்றும் அதிமுக நிர்வாகளிடம் செல்போனில் உரையாட ஆரம்பித்தார் சசிகலா. நிச்சயம் அரசியலுக்கு மீண்டும் வருவேன் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுவோம் என தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்து வரும் சசிகலாவின் ஆடியோவால் செய்வதறியாது, அவருடன் பேசும் அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை. 

இப்படியிருக்க விரைவில் அதிமுக காலியாகி விடும் என்ற எண்ணம் எழுந்த நிலையில், சைலண்ட்டாக உள்ளே நுழைந்து அமமுகவின் பெரிய பெரிய விக்கெட்களை எடுத்து வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. 

போன தேர்தலில் அதிரடியாக இறங்கி 5 சதவீத ஓட்டு வங்கியை பெற்ற டிடிவி தினகரன், இம்முறை எதிலும் ஒழுங்கான திட்டமின்மையால் இரண்டரை சதவீதமாக குறைந்தது வாக்கு வங்கி. தினகரனையும் எங்கும் காணோம் என புலம்பி வரும் அமமுக நிர்வாகிகளை, மூளைச் சலவை செய்து திமுக பக்கம் இழுத்து வருகிறார் செந்தில் பாலாஜி. 

டிடிவி.தினகரனுக்காக அதிமுகவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களையும், இடையில் புகுந்து தன்பக்கம் இழுத்த செந்தில்பாலாஜி, அமமுகவின் பெரிய விக்கெட்டையும் திமுக பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

கஷ்டப்பட்டு அமமுகவை உருவாக்கி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடையே நடைபெறும் கருத்து வேறுபாட்டை பயன்படுத்தி, அதிமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நம் பக்கம் இழுத்து மீண்டும் கட்சியை வலுப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் தொலைப்பேசியில் பேசி வரும் ஆடியோவை வெளியிட்டு வருகிறார். இருப்பினும் நிர்வாகிகளை ஆதரிக்கவும், நம்பிக்கையூட்டவும் களத்தில் செயல்பட்டு வந்த டிடிவி.தினகரன் தலைமறைவாக இருப்பதால் அமமுகவிலேயே இருக்கலாமா? அல்லது வேறெங்கும் செல்லலாமா? அப்படி எங்கு சென்றால் பதவி, மரியாதை கிடைக்கும் என சிந்தித்து வருபவர்களை தன்வசம் ஆக்குகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. 

இதுகுறித்து டிடிவி.தினகரனும், சசிகலாவும் வாய்திறக்காத நிலையில், உச்சக்கட்ட குழப்பத்தில் உள்ள அமமுக நிர்வாகிகள் பலரும் திமுகவிற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதிமுகவில் அதிகரித்து வரும் உட்கட்சி பூசலால் அங்கு சென்றால் இருக்கும் மரியாதையும் அதல பாதாளத்திற்கு சென்று விடும் என்பது அனைவரும் அறிந்ததே...