ஆ.ராசாவை குறிவைத்த பாஜக… பின்வாங்கிய ஆ. ராசா

ஆ.ராசாவை குறிவைத்த பாஜக… பின்வாங்கிய ஆ. ராசா

தனித்தமிழ்நாடு முதல் இந்து மதம் வரை ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சுகள். ஆ.ராசாவிற்கு கடிவாளம் போட காத்திருக்கும் பாஜக… சர்ச்சையும் எதிர்வினையும் 

தனித்தமிழ்நாடு கேட்ட ஆ. ராசா:

நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய திமுக எம்.பி. ஆ. ராசா, தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், எங்களை தனித்தமிழ் நாடு கேட்க வைத்துவிடாதீர்கள் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ.ராசாவின் இந்த பேச்சு, ஆங்கில ஊடங்களில் பேசு பொருளான நிலையில், இதற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. 

மீண்டும் ஒரு சர்ச்சை :

தனித்தமிழ்நாடு தொடர்பாக ஆ.ராசா பேசிய சர்ச்சைப் பேச்சு அடங்குவதற்குள்ளாகவே மற்றொரு சர்ச்சை பேச்சிற்கு வித்திட்டுள்ளார். இந்து மதம் குறித்தும், சனாதனம் குறித்தும் பேசிய ஆ. ராசா, . இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்... சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன் என்று பேசிய அந்த ஒற்றை வரி தான் தற்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை கொந்தளிப்பு அடையச் செய்துள்ளது.

மேலும் படிக்க:  நோட்டா.. ஏட்டா.. என்ன ஒரு ரைமிங்.. ! பாஜகவிற்கு பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி...!

திமுக VS பாஜக மோதல்:

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று முதலமைச்சர் கூறியது முதல் பாஜக – திமுக இடையே கடுமையான சித்தாந்த போட்டியானது ஏற்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. இதன் பின்னணியில், இந்திய ஜனநாயகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், அரசியல் சாசனத்தை பாஜக திருத்தப் பார்க்கிறது என்றும், இதனை முறியடிக்க வேண்டும் என்றால் சனாதனத்தை கடுமையாக திமுகவும், திராவிட கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் அரசியலில் பேசு பொருளாக்க வேண்டும் என ஆ. ராசா பேசியுள்ளார்.

எதிர்க்கும் பாஜக : 

ஆ. ராசாவின் பேச்சிற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள பாஜக, இந்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. அத்துடன், ஆ. ராசாவை திமுகவில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பாஜகவின் கருநாகராஜன் குறிப்பிட்டுள்ளார். 

மீண்டும் தேர்தலா? 

சர்ச்சைப் பேச்சை வெளிப்படுத்திய ஆ.ராசா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பாஜகவின் கருநாகராஜன், செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மீண்டும் தேர்தலில் ஆ.ராசா நிற்பார் எனக் கூறினார். இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.இந்து மதம் குறித்து ஆ.ராசாவின் கருத்திற்கு பழிவாங்கும் விதமாக பாஜக இடைத்தேர்தல் நடத்தும் அளவிற்கு அரசியல் செய்யப் போகிறதா என்பது தான்?

மேலும் படிக்க: #Exclusive | பாஜக தோற்றுப்போய்விட்டது..! ராகுலின் நடைபயணம் பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..! பத்திரிகையாளர் மணி

ஆ.ராசா விளக்கம்: 

இதனிடையே, தனது சர்ச்சைப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆ.ராசாவே விளக்கம் அளித்துள்ளார். அதில், சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும் எனக் கூறியுள்ளார்.