ஆனாலும் நிதியமைச்சருக்கு இவ்வளவு குசும்பு ஆகாதுப்பா.. காலனி வீசுன பெண்மணி சிண்ட்ரெல்லாவாம்..!

தொலைத்த ஒத்த செருப்பை தனது ஊழியர்களிடம் பெற்றுக் கொள்ளுமாறு நிதியமைச்சர் ட்வீட்..!

ஆனாலும் நிதியமைச்சருக்கு இவ்வளவு குசும்பு ஆகாதுப்பா.. காலனி வீசுன பெண்மணி சிண்ட்ரெல்லாவாம்..!

ஒத்த செருப்பை விட்டுச் சென்ற சிண்ட்ரல்லா அதனை தனது ஆதரவாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். 

வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்: கடந்த 11-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவ்வாறு இறந்தவர்களில் மதுரையை சேர்ந்த லட்சுமணன் என்ற வீரரும் ஒருவர்

மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி: ஜம்முவில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த லட்சுமணனின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

பாஜக-திமுக மோதல்: அதே நேரத்தில் அங்கு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் ஆகியோரும் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளனர். இதனால் திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அமைச்சர் வாகனம் மீது காலனி வீச்சு: லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட அமைச்சரின் கார் மீது, அங்கு குழுமியிருந்த பாஜகவை சேர்ந்த பெண்கள் காலனியை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

6 பேர் கைது: இந்த விவகாரம் பேசு பொருளான நிலையில், இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அமைச்சரின் வாகனம் மீது காலனியை வீசிய பெண் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிடிஆரின் விளக்கம்: மதுரையில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர், ”பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்பவில்லை” என தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

மன்னிப்பு கோரிய பாஜக மாவட்ட தலைவர்: இதனையடுத்து அமைச்சரை நேரில் சென்று சந்தித்த பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், அவரிடம் மன்னிப்பு கோரியதாக கூறினார். மேலும் வெறுப்புணர்வு மற்றும் மத அரசியலை செய்து வரும் பாஜகவில் இனி நான் தொடரப்போவதில்லை எனவும் கூறியிருந்தார். 

பாஜகவிலிருந்து சரவணன் நீக்கம்: இதனையடுத்து இன்று காலை மாநிலத் தலைவர் அண்ணாமலை, டாக்டர் சரவணனை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ”கட்சியின் பெயருக்கு களக்கம் விளைவிக்கும் வகையில் பேசியதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவியில் இருந்தும் சரவணனை விலக்குவதாக” கூறியிருந்தார். 

ஒத்த செருப்பை வைத்து நக்கலடித்த பிடிஆர்: இந்த நிலையில், தான் தற்போது பிடிஆர் பதிவிட்டுள்ள ட்வீட் வேகமாக பரவி வருகிறது. அதில், தனது கார் மீது வீசப்பட்ட ஒற்றை செருப்பின் புகைப்படத்தை பதிவிட்டு, “நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பிறகு பேசுகிறேன் ஆனால் இப்போது, மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்பு பகுதிக்குள் கட்சிக்காரர்களுடன் வந்த சிண்ட்ரல்லாவே.. செருப்பைத் திரும்பப் பெற விரும்பினால்... எனது ஊழியர்கள் அதை உங்களுக்காக எடுத்து வைத்துள்ளார்கள்” என கிண்டல் அடித்துள்ளார் பிடிஆர்.