மன்னார்குடி கும்பலை அதிமுகவுக்குள் நுழைய விடக் கூடாது... சசிகலாவை லெப்ட், ரைட் வாங்கிய சி.வி.சண்முகம்!!

சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையால் தான் ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் சீறிப் பாய்ந்துள்ளார்.

மன்னார்குடி கும்பலை அதிமுகவுக்குள் நுழைய விடக் கூடாது... சசிகலாவை லெப்ட், ரைட் வாங்கிய சி.வி.சண்முகம்!!

கடந்த சில தினங்களாக தொண்டர்களுடன் செல்போனில் உரையாடி வரும் சசிகலா, இனியும் இந்த அக்கிரமங்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், கொரோனா தொற்று சற்று தனிந்ததும் தொண்டர்களை நேரில் சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார். 

இதனால் திக்கு முக்கு தெரியாமல் விழிபிதுங்கியுள்ள அதிமுகவினர், முதற்கட்டமாக சசிகலாவுடன் செல்போனில் உரையாடிய 15 பேரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினர். மேலும் மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை அழைத்து தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைத்து, நம்பிக்கை ஊட்டி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரத்தில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் தன்னுடைய பாணியில் சசிகலா மற்றும அவரது குடும்பத்தை லெப்ட், ரைட் வாங்கிய சி.வி. சண்முகம், தொண்டர்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றி கொள்ளையடிக்கலாம் என சசிகலா கனவு காண்பதாக தெரிவித்தார். ஜெயலலிதா கூடவே இருந்து தங்களை வளப்படுத்திக் கொண்ட துரோகிகளை நினைவுக் கொல்ள வேண்டும் எனக் கூறிய அவர், சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பலை எந்த நிலையிலும் கட்சிக்குள் நெருங்க விடக் கூடாது என நடுங்கியப் படி கூறினார். 

எம்.எல்.ஏக்கள் வானூர் சக்கரபாணி, திண்டிவனம் அர்ச்சுனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் சசிகலாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது. அதிமுகவினர்  எவ்வாறு கதிகலங்கியுள்ளனர் என்பதனை அவர்களின் செயல்பாடுகளை வைத்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கல் எறிந்த குளம் போல அலைபாயும் அதிமுகவினர் சாந்தப்படுத்த சசிகலா எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.