லட்சக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு... சோகத்தில் மாணவர்கள்! அப்படி என்ன செய்தார்?

தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சைலேந்திர பாபு அவரது அனைத்து சமூகவலைதள பக்கங்களில் இருந்து திடீரென வெளிவந்த நிகழ்வு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லட்சக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு... சோகத்தில் மாணவர்கள்! அப்படி என்ன செய்தார்?

தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சைலேந்திர பாபு அவரது அனைத்து சமூகவலைதள பக்கங்களில் இருந்து திடீரென வெளிவந்த நிகழ்வு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த  திரிபாதியின் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி புதிய தலைமை இயக்குநராக முனைவர் சைலேந்திரபாபுவை தமிழ்நாடு அரசு ஜூன் 29ஆம் தேதி நியமித்தது. இதையடுத்து தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னதாக ஐ.பி.எஸ் சைலேந்திர பாபு சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். குறிப்பாக களத்தில் இறங்கி சேவை செய்வதில் தமிழ்நாடு காவல்துறை உயரதிகாரிகள் மட்டத்தில் சைலேந்திரபாபுவை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மழை, புயல், மீட்புப் பணி, சைக்கிள் பந்தயம் என அனைத்திலும் அவர் தன்னை முழுமையுடன் ஈடுபடுத்திக்கொள்வார். இது ஒருபுறம் இருக்க நீச்சல், துப்பாக்கி சுடுதல், சைக்கிளிங், உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு என உடல்நலன் சார்ந்த விஷயங்களில் தீவிரமாக கவனம் செலுத்துவார்.  பின்னர் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும் என விழிப்புணர்வு வீடியோக்களையும் அவரது சமூகவலைதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

குறிப்பாக விழிப்புணர்வு வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, இளைஞர் பட்டாளத்தை தன் பக்கம் திசை திருப்பி வைத்திருப்பவர் டிஜிபி சைலேந்திர பாபு.  அதிலும், இயற்கை உணவை சாப்பிட்டுக் கொண்டே போடும் வீடியோவுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்கிறார்கள். சாலையில் நின்று இளநீர் குடித்தாலும், அதை குடித்து கொண்டே அதன் நன்மைகளை பற்றி பேசுவார். இதன் காரணமாக இவர சமூகவலைதள கணக்குகளை லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளதால், காவல்துறை விதிகளின்படி, உயர் பதவியில் இருப்பவர் தனிப்பட்ட சமூக வலைதள கணக்குகளை வைத்திருக்கக்கூடாது. இதன் காரணமாக  தனது அனைத்து சமூகவலைதள பக்கங்களில் இருந்தும் டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளிவந்ததால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.