அதிமுகவின் பலத்தை அசைத்து பார்க்கும் திமுக..! கடும் நெருக்கடியில் அதிமுக, பாஜக..!

அதிமுகவின் பலத்தை அசைத்து பார்க்கும் திமுக..! கடும் நெருக்கடியில் அதிமுக, பாஜக..!

நான்கு நாள் சுற்று பயணமாக கோவை, ஈரோடு, திருப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுமார் 55,000 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். அதில் மாற்றுக்கட்சியை சேர்ந்த முக்கியமான சிலரும் அடங்குவர்.

2021 தேர்தல்:

மேற்கு தமிழ்நாடு என்பது எம்.ஜி.ஆர் காலம் தொட்டே அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும், மேற்கு தமிழ்நாட்டில் வெற்றி என்னவோ அதிமுகவிற்கு தான். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட தமிழ்நாடு பல இடங்களில் திமுக வெற்றிபெற்ற போதும் கூட மேற்கு தமிழ்நாட்டில் வெற்றி பெறமுடியவில்லை. 

செந்தில் பாலாஜி:

மேற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர் செந்தில்பாலாஜி. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர் என்பதால் அதிமுகவின் வீயூகங்கள் அனைத்தும் அறிந்தவர். உள்ளாட்சி தேர்தலில் மேற்கு தமிழகத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதற்கான செந்தில்பாலாஜியை களத்தில் இறக்கி விட்டு இருந்தார் முதலமைச்சர். எதிர்பார்த்தது போலவே, உள்ளாட்சித் தேர்தலில் மேற்கு தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்றது திமுக. இது அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சற்று கலகத்தையே கொடுத்திருந்தது. 

மேலும் படிக்க: வேடந்தாங்கல் பறவை போல் தாவியுள்ளார்..! அதிமுக சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்..! 

மீண்டும் அசைத்து பார்த்த திமுக:

மாற்று கட்சியில் இருந்து சுமார் 50,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. செந்தில் பாலாஜி அதை செய்துகாட்டி முதலமைச்சரை வியக்கவைத்து இருக்கிறார். அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளில் இருக்கும் நிர்வாகிகள் மட்டுமல்லாமல், தொண்டர்கள் பலர் திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு திமுகவில் இணைந்துள்ளனர்.

முக்கிய இணைவுகள்:

அதிமுகவிலிருந்து விலகி ஆறுகுட்டி, தேமுதிகவிலிருந்து விலகி பணபட்டி தினகரன், பாஜகவின் மாநில மகளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி, மக்கள் நீதிமய்யத்தில் இருந்து ஒருவர் என பல முக்கிய நிர்வாகிகளும் திமுகவில் இணைந்துள்ளனர். இதன் தாக்கம் நிச்சயம் 2024 தேர்தலில் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேற்கு தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, கரூர், திண்டுக்கல் ஆகிய 11 மக்களவை தொகுதிகள் உள்ளன.

மொத்தமாக அள்ள திட்டம்:

கடந்த சட்டமன்றத் தேர்தலில், மேற்கு மண்டலத்தில் உள்ள 68 தொகுதிகளில் 44 இல் அதிமுகவும், 24 இல் திமுகவும் வெற்றி பெற்றது. குறிப்பாக கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக தனது பலத்தை நிரூபித்தது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கு தமிழ்நாட்டில் உள்ள மொத்த தொகுதிகளையும் அள்ள திட்டம் வகுத்துளளது திமுக. அதற்கான முன்னெடுப்பாகவே இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: அதிமுகக்கு எந்த பின்னடைவும் இல்லையாம்..! எப்பவும் போல இருக்காங்களாம்..!

அதிருப்தியில் பாஜக, அதிமுக:

அதிமுகவின் பலமே மேற்கு தமிழ்நாடு தான். தற்போது மேற்கு தமிழ்நாட்டில் திமுகவிற்கு ஆதரவு பெருகியுள்ளதற்கு நேற்றைய நிகழ்வே பார்க்கப்படுகிறது. 10 நிமிடத்தில் சென்று விடக்கூடிய விருந்தினர் மாளிகைக்கு, மக்கள் வெள்ளத்தில் 1 மணி நேரம் சென்று இருக்கிறார் முதலமைச்சர். இது அதிமுக மற்றும் பாஜகவிற்கு சற்று அதிருப்தி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.