பாஜக எதிர்பை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்த திமுக..!

பாஜக எதிர்பை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்த திமுக..!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது திமுக.

அனைத்துக்கட்சிக் கூட்டம்:

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார்அட்டையை இணைப்பது குறித்து விவாதிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் 9 காட்சிகள் கலந்துகொண்ட அனைத்துகட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

திமுக எதிர்ப்பு:

திமுக தரப்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். 

திமுக - பாஜக:

திமுகவின் இந்த செயல், மறைமுகமாக பாஜகவை எதிர்பதாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த சில நாட்களாகவே திமுக, பாஜகவுடன் இணக்கம் காட்டுகின்றது என பேச்சுகள் எழுந்தது. ஒலிம்பியாட் துவக்கவிழா மேடையில் மோடி - ஸ்டாலின் நெருக்கமாக இருந்தததை குறிப்பிட்டு, திமுக - பாஜக இணக்கம் காட்டுகின்றன என்ற செய்திகள் வெளிவந்தது.

கூட்டணியை வலுப்படுத்தும் கட்டாயம்:

பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் அதிமுகவே, திமுக மோடியுடன் இணங்கி செல்கிறது என கூறியதால், திமுக தனது கூட்டணி நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டது.

கேரளா மனோரமா:

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புகழ்பெற்ற மலையாள மனோரமா கருத்தரங்கில் காணொளி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் எந்த அதிருப்தியும் இல்லை எனக் கூறினார். மேலும், திமுக - பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்ற ரீதியிலும் தெளிவுபடுத்தி இருந்தார்.

மீண்டும் அழுத்தமான பதிவு:

மலையாள மனோரமா கருதரங்களில் மத்திய அரசின், ஒரே மொழி, ஒரே நாடு என்பது சாத்தியமில்லை யானா முதலைச்சர் குறி இருந்தது, பாஜக மீதான எதிர்ப்பை காட்டுவதாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திலும் எதிர்ப்பை தெரிவித்து இருப்பது, மீண்டும் ஒரு முறை பாஜகவின் செயல்பாடுகளை திமுக எதிர்க்கிறது எனபதை அழுத்தமாக பதிவு செய்யும் செயல்பாடோ என்ற கேள்வியை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.