இலங்கையின் பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன

இலங்கையின் பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன சற்று முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

பொருளாதார நெருக்கடியில் இலங்கையில்

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க ஆயுதங்கள்,போர்த் தளவாடங்கள் மற்றும் கடனுதவிகள் பெற்றதில் இலங்கைப் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்தது. இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்ததால் அந்நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தினர். 

ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிர்ப்பு 

பொருளாதார நிலையை முன்னேற்ற எந்தவொரு நடவடிக்கையையும் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதனால் அவர்கள் பதவி விலகக் கோரியும் புதிய அரசியலமைப்பு உருவாக்க வேண்டும் எனவும் மக்கள் போராட்டம் வெடித்தது. மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் பதவி விலகிய நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

புதிய பிரதமர்

மக்கள் ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவரான தினேஷ் குணவர்தன இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பகல் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.