செந்தில் பாலாஜியுடன் கரம் கோர்த்த கே.எஸ்.அழகிரி..!

அமலாக்கத்துறை சோதனை விவகாரத்தில் செந்தில் பாலாஜியுடன் கரம் கோர்த்த கே.எஸ்.அழகிரி.
அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்குமா?
சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தாவின் அமைச்சரவை சகாக்கள் என அமலாக்கத்துறை அரசியல் விசாரணை, அமலாக்க அரசியல் என எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது. இந்த பின்னணியில் தான், அண்ணாமலை கூறிய அமலாக்கத்துறை அரசியல் தமிழ்நாட்டிற்கும் வரும் என கூறியது தனி கவனத்தைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அமலாக்கத்துறை பிஸியா இருக்குறாங்க. அங்க முடிச்சிட்டு இங்க தான் வருவாங்க. செந்தில் பாலாஜி வீட்டிற்கு கூடிய விரைவில் அமலாக்கத்துறை வருவார்கள் எனக் கூற, அமலாக்க அரசியல் தமிழ்நாட்டிலும் பேசு பொருளாகியுள்ளது.
ஸ்டாலின் அடிமை இல்லை:
இந்த பின்னணியில் தான், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் அண்ணாமலை வேண்டுமானால் அடிமையாக இருக்கலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டிலும் அமலாக்கதுறை அரசியல்...அண்ணாமலை சூசகம்!!!
அண்ணாமலை என்ன உள்துறை அமைச்சரா?:
அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டிற்கு அமலாக்கத்துறையை அனுப்பிவிடுவீர்களா நீங்கள்?. அண்ணாமலை என்ன உள்துறை அமைச்சரா? செந்தில் பாஜாஜி வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் என அவர் கூறுகிறார் என்றால், அமலாக்கத்துறை அண்ணாமலையிடம் உள்ளதா இல்லை அரசாங்கத்திடம் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொறுப்பற்ற பேச்சு:
பொறுப்பற்ற ஒரு அரசியல் தலைவராக செயல்படுகிறார் அண்ணாமலை. ஆதாரமே இல்லாமல் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது பல குற்றசாட்டுகளை வைக்கும் நீங்கள், குற்றசாட்டை நிரூபித்துள்ளீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயமுறுத்த நினைக்கிறார்கள்:
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை பயமுறுத்தியது போல இங்கு தமிழ்நாட்டில் திமுக வை பயமுறுத்த நினைக்கிறார்கள். அதனால் தான் செந்தில் பாலாஜி வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் என்கிறார்கள். ஆனால் திமுக சிவசேனா போன்றது இல்லை. திமுக மிக வலுவான கட்சி எனக்கூறியவர்,
திமுகவுடன் நங்கள் இருக்கிறோம்;
திமுகவுடன் கூட்டணி கட்சிகளான நங்கள் இருக்கிறோம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளது, வைகோ உள்ளார். பாஜகவினரை விட பல நூறு மடங்கு நங்கள் வலிமையானவர்கள், உறுதியானவர்கள், தைரியமானவர்கள். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வீட்டிற்கு போய்விடுமா? எனவும் கூறியுள்ளார்.
தைரியம் இருந்தால் தமிழ்நாட்டுக்கு வாருங்கள்:
வங்காளத்திற்கு போகலாம், மகாராஷ்டிராவிற்கு போகலாம், தைரியம் இருந்தால் தமிழ்நாட்டிற்கு வாருங்கள் எனவும் சவால் விட்டுள்ளார்.
இன கலவரத்தை ஏற்படுத்த முயற்சி;
நாட்டில் பெரிய இன கலவரத்திற்கும், மக்களிடம் ஒற்றுமையின்மையை ஏற்படுவதற்கும் பாஜக முயற்சி செய்கிறது எனவும் கே.எஸ். அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.