இ-ரெஜிஸ்டர் பரிதாபங்கள் .. மோடி, அமித்ஷா, ரஜினிக்கு இ-பதிவு... மதுரை போறாங்களாம்... செல்லூர் ராஜூ டிரைவராம்...

போலியான ஆவணங்களை கொண்டு இ-ரெஜிஸ்டர் செய்ததை சரிபார்க்காமல், அதற்கு அனுமதி கொடுத்ததாக புகார்.

இ-ரெஜிஸ்டர் பரிதாபங்கள் .. மோடி, அமித்ஷா, ரஜினிக்கு இ-பதிவு... மதுரை போறாங்களாம்... செல்லூர் ராஜூ டிரைவராம்...

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமடைந்து வருவதால், பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வருகின்றன.

கொரோனாவின் இரண்டாம் அலையினால் தமிழகம் இதுவரை காணாத பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இதனை தடுக்க  மக்கள் ஊரடங்கை எப்படி கடைபிடிக்க வேண்டும் .. ஆனால் அப்படி தான் இருக்கிறதா ஊரடங்கு எங்கு பார்த்தாலும் வாகனங்கள் எப்போதும் போல இருக்கும் சாலைகள்..

எப்படி இது சாத்தியம்? இவர்களுடைய வாகனங்கள் செல்ல எப்படி அனுமதி கிடைத்தது..? 

முதலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெயரில் சென்னையில் இருந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செல்ல தமிழக அரசின் இ-ரெஜிஸ்டர் மூலம் பதிவு செய்யப்பட்டது. உடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா செல்வதாகவும் உள்ளீடு செய்யப்பட்டது. 

பயண நாள் / தொலைபேசி எண் /  வாகன எண்/ வாகனத்தின் ஓட்டுனராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பெயர்  என அனைத்தையும் போலியாக உள்ளீடு செய்த செய்தியாளர்கள் அரசு அடையாள அட்டை என்ற இடத்தில் மோடியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தார்கள்.  

இதனை எல்லாம் ஏற்றுக்கொண்ட கம்ப்யூட்டர்  4ம் தேதியான இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் சென்னையில் இருந்து மதுரை செல்ல இ-ரெஜிஸ்டர் பதிவு மூலம் அனுமதி கொடுத்தது. 

அப்படி என்றால் நாம் சாலையில் பார்க்கும் வாகனங்கள் எல்லாம் இப்படி தான் செல்கிறதா? என்றால் இல்லை. 

பொதுவாக இ-ரெஜிஸ்டர் பதிவு முறையாக கவனிக்கப்படாத காரணத்தினால் சாதாரண காரணங்களை எல்லாம் உள்ளீடு செய்யும் போது ஆட்டோமேட்டிக் அடிப்படையில் இ-ரெஜிஸ்டர் பதிவு கிடைக்கிறது, மக்களும் அரசே இ-பதிவு கொடுத்தது போல செல்லும் வழியில் எல்லாம் மறிக்காத போலீசாரிடம் வாகனத்தை நிறுத்தி எங்களிடம் இ-ரெஜிஸ்டர் உள்ளது என காண்பித்து செல்கிறார்கள்.  

கொரோனா பெருந்தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்தும் அரசு பொருளாதாரம் இழந்துள்ள நிலையில் அலட்சியமாக இ-ரெஜிஸ்டர் பதிவு செயல்படுவது ஊராடங்கின் நிலையை கேள்வி குறியாக்கி உள்ளது. 

சரி இது எல்லாமே போலி பதிவு என்றாலும் உண்மையாகவே நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான பி.எம்.டபிள் யூ  வாகனத்தின் மூலம் சென்னையில் இருந்து மதுரை செல்வது போல இ-ரெஜிஸ்டர் பதிவு செய்தோம் .

அதேபோல் முகவரி / தொலைபேசி எண்/ மதுரை செல்லும் இடத்தின் முகவரிகளை பெற்றுக்கொண்டது.பின்னர் இதற்கும் கிடைத்தது அமோகமான  இபாஸ் பதிவு

காவல்துறையினர் சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் முழுமையாக பரிசோதனை செய்து முழுஊரடங்கு முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.