மீண்டும் பதவியை ட்விட்டரில் இணைத்த ஈபிஎஸ்.. அப்போ ஓபிஎஸ் என்னன்னு போடுவாரு?

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு..!

மீண்டும் பதவியை ட்விட்டரில் இணைத்த ஈபிஎஸ்.. அப்போ ஓபிஎஸ் என்னன்னு போடுவாரு?

ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பொறுப்பை இணைத்துள்ளார் ஈபிஎஸ். 

ஒற்றைத் தலைமை:

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. ஜூன் மாதம் கூடிய பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், தீர்மானங்களை புறக்கணிப்பதாக ஈபிஎஸ் தரப்பினர் கூறி, ஒற்றைத் தலைமை தான் வேண்டுமென கோஷமிட்டு, மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் கோரிக்கை வைத்தனர். 

ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு:

அதன் படி ஜூலை 11-ம் தேதி ஈபிஎஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் கூடியது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுமீது விசாராணை நடத்தப்பட்டு, பொதுக்குழு அன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. பொதுக்குழு நடத்த தடை விதிக்க முடியாது என்ற தீர்ப்பிற்கிணங்க, பொதுக்குழு நடைபெற்று, அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். 

ட்விட்டரில் பதிவு:

இந்த பதவி கிடைத்த அடுத்தநாளே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஈபிஎஸ் தனது பதவியை அதிமுக பொதுச்செயலாளர் என மாற்றினார். 

ஓபிஎஸ் மீண்டும் மனு:

ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மீண்டும் மனு தாக்கல் செய்ய, அந்த வழக்கு விசாரணையின் முடிவில், பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் 24-ம் தேதிக்கு முன்பு என்ன நிலைமையில் அதிமுக இருந்ததோ அதுவே தொடரும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து ஈபிஎஸ் தனது பொதுச்செயலாளர் என்ற பதவியை ட்விட்டரில் இருந்து நீக்கினார். 

இணைய அழைப்பு:

நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும். மீண்டும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படலாம் என ஈபிஎஸ்க்கு மட்டுமின்றி அம்மா மக்கள் முன்னெற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருக்கும் பகிரங்கமாக வெளிப்படையாக அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்

ஈபிஎஸ் மறுப்பு:

ஆனால் இந்த அழைப்பை மறுத்துவிட்டு, தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பில் 
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவித்த தனி நீதிபதியின் உத்தரவு செல்லாது என 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

ட்விட்டரில் இணைப்பு:

இதனால் ஜூலை 11-ம் தேதி வழங்கப்பட்ட பொறுப்புகளும் செல்லும் என்பதால், அன்று 
கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்றாகிவிட்டது. தீர்ப்பு வந்த உடனேயே மீண்டும் ட்விட்டரில் தனது பதவியை பொதுச்செயலாளர் என மாற்றியுள்ளார் ஈபிஎஸ். 

இதையும் படிங்க: ஓபிஎஸ் இனி ஜீரோ தான் - ஜெயக்குமார்..!