அதிகாலை முதல் சோதனை..! வட்டிக்கு வட்டி வாங்கும் பைனான்சியர்..!

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
அன்பு செழியன்:
முன்னாள் முதல்வர்கள் முதல் இந்நாள் முதல்வர்களை வரை அனைவருடனும் நெருக்கிய பழக்கம் கொண்டவரான அன்பு செழியனுக்கு வசந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பம்மனேந்தல் கிராமம்.
சினிமா பைனான்சியர்:
சொந்த ஊரில் இருந்து மதுரைக்கு தொழில் வாய்ப்பு தேடி குடி பெயர்ந்த அன்பு செழியன், முதுகுளத்தூரை சேர்ந்தவர்கள் அதிகமாக செய்து வந்த வட்டி தொழிலை செய்ய ஆரம்பித்துள்ளார். அங்கு உள்ள கடைகளுக்கு வட்டிக்கு படம் கொடுத்து வந்தவருக்கு, அங்கு இருக்கும் சிலர் சினிமாவிற்கு பைனான்ஸ் செய்து வருவது தெரியவந்தது. அவர்களுடன் நட்பை வளர்த்துக்கொண்ட அன்பு செழியன், மதுரையில் இருந்தவாறே சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் செய்து வந்துள்ளார்.
கைக்குள் தமிழ் சினிமா:
அப்போது தமிழ் சினிமாவில் வடமாநிலத்தவர்களே அதிகமா பைனான்ஸ் செய்து வந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்த்த ஒருவர் பைனான்ஸ் செய்கிறார் என்பதால் அவரிடம் அதிகமா கடன் வாங்க ஆரம்பித்தனர். சில நாட்கள் குறைவான வட்டிக்கு பைனான்ஸ் செய்து வந்துள்ளார். 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு அவரது பைனாஸ் தொழில் வேகமெடுத்தது.
வட்டிக்கு வட்டி:
குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியை தராவிட்டால் வட்டியில் அளவை அதிகரிப்பது, வட்டிக்கு வட்டி போடுவது என சினிமா துறைக்குள் காலோச்ச ஆரம்பித்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் எந்த படம் ரிலீஸாகவேண்டும் என்றாலும் அன்புச்செழியன் தயவு வேண்டும் என்கிற நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்.
தம்பி உடையான் எதற்கும் அஞ்சான்:
சினமா தயாரிப்பு நிறுவனம், விநியோகஸ்தர் என்று பல வழிகளில் இன்று சினிமாத்துறைக்குள் கொடிகட்டி பறக்கும் அன்புச்செழியனுக்கு பக்கபலமாக, கடனை வசூலிக்கும் ஆளாக இருப்பது இருப்பது அவரது தம்பி அழகர் என்று கூறப்படுகிறது.
2020 இல் சோதனை:
2020 பிகில் படத்திற்கு பின்னர், மதுரை மற்றும் சென்னையில் அன்பு செழியனுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வரதா 65 கோடி ரூபாய் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மீண்டும் சோதனை:
இன்று மதுரை மற்றும் சென்னை தியாராய நகரில் அமைந்துள்ள அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம், நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புசெழியனின் அலுவலகம் உட்பட அன்பு செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் அதிகாலை 5 மணி முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அசோக் குமார் மரணம்:
2017ஆம் ஆண்டு நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தனது மரணத்திற்கு காரணம் அன்புசெழியன் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து அன்பு செழியனிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது