சிக்கியது ஆதாரம்...சோனியாகாந்தி, ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்களா?

சிக்கியது ஆதாரம்...சோனியாகாந்தி, ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்களா?

மூன்றாம் தரப்பினருக்கும் நேஷனல் ஹெரால்டுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையே சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகள் நடந்ததற்கான ஆதாரங்களை அமலாக்க இயக்குநரகம்  கண்டறிந்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு:

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.

சோனியாகாந்தி, ராகுல் காந்தியிடம் விசாரணை:

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை  காங்., தலைவர் சோனியா காந்தியிடம் 2 நாட்களும்,  அவரது மகனும் காங்கிரஸ்  எம்.பி.,யுமான ராகுல் காந்தியிடம் 5 நாட்களும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. சோனியா, ராகுல் இருவரின் விசாரணையை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

அமலாக்கத்துறை சோதனை:

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி டெல்லியில் உள்ள ஐ.டி.ஓ.,வில் அமைந்திருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 12 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் அதிரடி  சோதனை நடத்தினர்.

யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல்: 

நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையடுத்து, ஆகஸ்ட் 3 ஆம் தேதி  டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். மேலும், தங்களின் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சோதனையில் சிக்கிய ஆவணங்கள்:

யங் இந்தியன் வளாகத்தில் சோதனையை முடித்த பிறகு நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கதுறை முக்கிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 
சோதனையின் போது, ​​மும்பை மற்றும் கொல்கத்தாவில் மூன்றாம் தரப்பினருக்கும் நேஷனல் ஹெரால்டுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையே சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகள் நடந்ததற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை   கண்டறிந்துள்ளது. ஆதரங்களை கைப்பற்றியதைத் தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் அறிக்கைகளை அமலாக்க இயக்குனரகம் மறு ஆய்வு செய்து வருகிறது.

சோனியா, ராகுல் கைது செய்யப்படுவார்களா?:

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி, சோனியா, ராகுலுக்கு எதிரான ஆவணங்களை மீட்டெடுத்துள்ளதால் அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? சோனியா மற்றும் ராகுல் கைது செய்யப்படுவார்களா? என்பது குறித்த கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் உலாவி வருகிறது.