தாத்தா அப்படி சொல்றாரு.. பேரன் இப்படி சொல்றாரு.. உதயநிதியின் செயலுக்கு அண்ணாமலை விமர்சனம்..!

இந்தி திணித்தால் அதனை எதிர்ப்பது தான் திமுகவின் கொள்கை - உதயநிதி..!

தாத்தா அப்படி சொல்றாரு.. பேரன் இப்படி சொல்றாரு.. உதயநிதியின் செயலுக்கு அண்ணாமலை விமர்சனம்..!

லால் சிங் தத்தா: பாலிவுட் நடிகர் ஆமிர் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் லால் சிங் சத்தா. ஆகஸ்ட் 11-ம் தேதி பான் இந்தியா படமாக உலகளவில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் லால் சிங் சத்தா படத்தை வெளியிடவுள்ளது. 

செய்தியாளர் சந்திப்பு: தமிழ்நாட்டில் புரோமஷனுக்காக செய்தியாளர் சந்திப்பு 7-ம் தேதி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், உதயநிதி ஸ்டாலின் உட்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 

திமுக இந்தி மொழிக்கு எதிரானது அல்ல: நிகழ்ச்சியில், இந்தியை ஆரம்பத்தில் இருந்து திமுக எதிர்த்து வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் இந்தப் படத்தை  வெளியிடுவதால் ஏற்படும் எதிர்ப்புகளை எப்படி சமாளிப்பீர்கள் என உதயநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "இந்தி தெரியாது போடா என்பது இந்தி திணிப்புக்கு எதிரான ஒன்று தானே தவிர, இந்தி மொழியை கற்கக் கூடாது என எப்போதுமே சொன்னது கிடையாது என்றார். மேலும் இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என யாராவது திணித்தால் அதனை எதிர்க்க வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை" எனவும் தெரிவித்தார். 

ஆமிரின் ரசிகன் நான்: தொடர்ந்து பேசிய அவர், எனக்கு ஆமிர் கானின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அவருடைய படங்களை ரசித்துள்ளேன். லால் சிங் தத்தா திரைப்படத்தில் நிறைய இந்திய வரலாறு பேசப்பட்டு உள்ளது. இதை ஒரு ரசிகருக்கான தருணமாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தார். 

அண்ணாமலையின் ட்வீட்: உதயநிதியின் இந்தி குறித்தான கருத்துக்கு, ட்வீட் மூலம் விமர்சனம் கொடுத்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”தாத்தா மற்றும் தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர்: எந்த வடிவில் இந்தி வந்தாலும் தமிழ்நாட்டில் அதை அனுமதிக்க மாட்டோம். பேரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்: தமிழ்நாட்டில் ஆமிர் கானின் இந்தி படமான லால் சிங் சத்தாவை நாங்கள் வெளியிடுகிறோம். நீதி: அரசியலை விட வணிகமே முதன்மை பெறுகிறது” எனக் கூறியுள்ளார்.