தாத்தா மகாராஜா ஹரி சிங்கிற்காக நியாயம் கேட்ட பேரன் அஜாதசத்ரு!! அநியாயம் இழைத்ததா நேரு அரசு?!!

தாத்தா மகாராஜா ஹரி சிங்கிற்காக நியாயம் கேட்ட பேரன் அஜாதசத்ரு!! அநியாயம் இழைத்ததா நேரு அரசு?!!

மகாராஜா ஹரி சிங் ஒரு உண்மையான தேசபக்தர். 1930ல் லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிறகு ஆங்கிலேயர்களும் அவருக்கு எதிராக திரும்பினர்.

மேலும் தெரிந்துகொள்க:  நேரு குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ்...!!!

ஜெய்ராம் ரமேஷை விமர்சித்த பேரன்:

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷின் சமீபத்திய கருத்தை மகாராஜா ஹரி சிங்கின் பேரனும் டாக்டர் கரண் சிங்கின் மகனுமான அஜதசத்ரு சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீர் வரலாறு குறித்து ஜெய்ராம் ரமேஷுக்கு எந்த அறிவும் இல்லை என்று கூறினார். 

இதற்கு முன்னரே தந்தை மகாராஜா ஹரி சிங் குறித்து கூறியுள்ள கருத்துகள் ஏற்க முடியாதவை என்று டாக்டர் கரண் சிங்கும் ஜெய்ராம் ரமேஷின் கருத்து குறித்து  கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

உண்மையான தேபக்தரா?:

”மகாராஜா ஹரி சிங் ஒரு உண்மையான தேசபக்தர் என்று அஜாதசத்ரு சிங் கூறுகிறார். அதற்கு காரணமாக பெரும் விளக்கத்தையும் அளித்துள்ளார்.  1930ல் லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் மகாராஜா கலந்து கொண்டு ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தினார்.” எனக் கூறியுள்ளார். 

மேலும்,” அதன் பிறகு ஆங்கிலேயர்கள் அவருக்கு எதிராக திரும்பினர் எனக் கூறுகிறது வரலாறு. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பண்டித ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமரானார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.  நேரு ஷேக் அப்துல்லாவுடன் நட்பு கொண்டிருந்ததால் ஜம்மு காஷ்மீரில் இருந்து மகாராஜா ஹரி சிங்கை வெளியேற்ற பாடுபட்டார்.” எனத் தெரிவித்துள்ளார் மகாராஜாவின் பேரன் அஜாதசத்ரு.

அதிகாரத்தை கையிலெடுத்த நேரு:

மேலும், “ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் படேலை முடிவெடுக்க விடாமல் நேரு தடுத்து, அந்த விஷயத்தை தன் கையில் வைத்திருந்தார், இதனால் நாடு இன்றுவரை பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மகாராஜா ஹரி சிங்குக்கு தகுந்த மரியாதை செய்துள்ளது. அதாவது அவரது பிறந்தநாளை விடுமுறை நாளாக அறிவித்ததோடு ஜம்மு காஷ்மீர் இணைப்பு நாளையும் விடுமுறையாக அறிவித்துள்ளது.” எனக் கூறியுள்ளார் அஜாதசத்ரு.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    குஜராத்தை குஜராத்தாக மாற்றிய பிரதமர் மோடி!!!