சல்மான்கான் பண்ணை வீட்டில் குவியல் குவியலாக பிணங்கள்..!

பக்கத்து வீட்டுக்காரரின் பகீர் குற்றச்சாட்டு..!

சல்மான்கான் பண்ணை வீட்டில் குவியல் குவியலாக பிணங்கள்..!

பாலிவுட்டில் பிரபல முன்னணி ஹீரோவான சல்மான்கான் வீட்டில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ ஐசி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் சல்மான்கான். துணை கதாபாத்திரத்தில் தனது பயணத்தை துவங்கியவர், 1989-ம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்றப் படத்தின் மூலம் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து, தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வரும் சல்மான் கான் அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் சிக்குவார். உதாரணமாக கடந்த 2002-ம் ஆண்டு மும்பையில் சாலையோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான்கான் வாகனம் மோதிய வழக்கு குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. அதற்கு முன்பே 1998-ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹெயின் என்ற ஹிந்தி படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த சல்மான் கான், ஜோத்பூரை ஒட்டிய கங்கனி கிராமத்தில் அதிகளவில் வசித்து வரும் வெளி மான் என்ற அரிய வகை மான்கள் இரண்டை வேட்டையாடியதாக புகார் எழுந்தது. 

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. நடிகர் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த வழக்கில் இருந்து வெளியே வந்தவர், தொடர்ந்து ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்த்து வழங்கி வந்தார். பல படங்களிலும் பிசியாக நடித்து வந்தார். பொதுவாக தன்னுடைய ஓய்வு நாட்களை தன்னுடைய பண்ணை வீட்டில் கழிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் சல்மான் கான். மாகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் பன்வெல் என்ற இடத்தில் உள்ளது அந்த பண்ணை வீடு. இந்த வீட்டில் விவசாய பணிகளில் ஓய்வு நேரத்தில் ஈடுபடுவார் சல்மான். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பண்ணை வீட்டில் இருந்த சல்மான் கானை பாம்பு கடித்தது. இதனையடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஷ முறிவு மருந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. 

இதே பண்ணை வீட்டில் தான் குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடப்பதாகவும், திரையுலகை சேந்த பலர் மரணித்து அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படுவதாகவும் அதே பகுதியை சேர்ந்த கேத்தன் கக்கட் என்பவர் புகார் அளித்திருந்தார். இவரின் இந்த புகார் பாலிவுட்டில் மட்டுமல்லாது, சோஷியல் மீடியாவிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு எதிராகவும், புகார் கொடுத்த கேத்தனுக்கு எதிராகவும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் சல்மான் கான். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சல்மான் கான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சல்மான்கானின் வீட்டுக்கு அருகே கேத்தன் கக்கட் என்பவர் நிலம் வைத்திருக்கிறார். அவர் வேண்டும் என்று சல்மான்கான் மீது அவதூறாக பொய் வதந்திகளை பரப்பி உள்ளார். அவர் மதம் தொடர்பாகவும் தவறாக பேசியிருக்கிறார். மீது உரிய நடவடிக்கை எடுக்க பேசியிருக்கிறார். உத்தரவிட வேண்டும். அவர் கூறிய அனைத்தும் பொய் என வாதிட்டார். இதனை தொடர்ந்து சல்மான் கானின் இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு கேத்தன் கக்கட்டுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரபலம் என்றாலே பிராபலம் தான்...