என்னோட நேரத்தை வீணாக்காதீங்க... வானதியை ட்விட்டரில் பிளாக் செய்த அமைச்சர் பிடிஆர்!!

உங்கள் பொய்களுடன் என்னை ட்விட்டரில் டேக் செய்வதை நிறுத்துங்கள். ஏதாவது பயனுள்ள பணிகளை செய்யுங்கள். அதற்கு பதிலாக ஏதேனும் பயனளிக்கக் கூடிய பணிகளை பாருங்கள் என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரை ட்விட்டரில் பிளாக் செய்துவிட்டார்.

என்னோட நேரத்தை வீணாக்காதீங்க... வானதியை ட்விட்டரில் பிளாக் செய்த அமைச்சர் பிடிஆர்!!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கோவாவிற்கு எதிராகவும் அந்த மாநிலத்தை அவமதித்ததும் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதால், கோவாவை அவமதித்த பிடிஆர் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மாநில அமைச்சர் கேட்டுக் கொண்டார். 

இதற்கு விளக்கமளித்த பிடிஆர் நடந்தவற்றை விளக்கமளித்த அவர், தான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என சொல்லிவிட்டார். இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டர் ஜிஎஸ்டி கவுன்சிலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடந்து கொண்ட விதம் நமது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அவமானம். நமது மாநிலத்திற்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. கோவா போக்குவரத்துத் துறை அமைச்சரை விமர்சனம் செய்வதால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என  பிடிஆரை டேக் செய்து வானதி பதிவிட்டிருந்தார்.

வானதியின் டீவீட்டை பார்த்து கடுப்பான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் , ஜிஎஸ்டி கவுன்சிலில் நடந்தது என்ன என்று தெளிவாக சொல்லியும், வானதி ஸ்ரீனிவாசன் இவ்வாறு கூறியதை கண்ட பிடிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் பொய்களுடன் என்னை ட்விட்டரில் டேக் செய்வதை நிறுத்துங்கள். ஏதாவது பயனுள்ள பணிகளை செய்யுங்கள். நீங்கள் பிறவியிலேயே பொய்யரா இல்லை உங்களுக்கு உண்மையில் IQ திறன் குறைவா? ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் யாரும் யாரையும் அவமதித்துவிடலாம் என நினைக்கிறீர்களா? என கூறிய பிடிஆர், கொஞ்சம் பொறுங்கள், நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காதீர். இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி. நீங்கள் இரண்டுமே என வானதியை ட்விட்டரில் பிளாக் செய்த அவர்,"

"இப்போதெல்லாம் பிணங்கள் விழவில்லை என்பதால் அரசியல் செய்யமுடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார்", திமுக செய்தித் தொடர்பாளர் குறித்து பேசியவர்தான் நீங்கள். ஒரு கெட்ட வாசனையைத் தவிர்க்க, ஒரு சாதாரண நபர் வீட்டின் ஜன்னலை மூடுவதைப் போல நான் உங்களை பிளாக் செய்கிறேன். உங்களிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ்ப் பெறுவது இழிவானது... எனது நேரத்தை வீணாக்காதீர்கள்" என பங்கம் செய்துள்ளார்.

அமைச்சர் பதிலடியோடு பிளாக் செய்ததை கண்டா ட்விட்டர்வாசிகள், என்னங்க வானதி மேடம் வாயைக்கொடுத்து இப்படி அசிங்கப்படலாமா? என கலாய்த்து வருகின்றனர்.