ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி  : யார் இந்த பூஜா சிங்கால்? 

சமீப காலமாக ஐஏஎஸ் அதிகாரியான பூஜா சிங்கால் குறித்த செய்திகள் தான் இணையத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. அவரைப் பற்றியும், அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு பார்க்கலாம்.

ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி  : யார் இந்த பூஜா சிங்கால்? 

பூஜா சிங்கால் 2000 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார், இவர் ஜார்கண்ட் சுரங்கத் துறையின் செயலாளராக பணி புரிகிறார். மேலும், ஜார்கண்ட் மாநில கனிம வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். 

ஜார்க்கண்ட் சுரங்கத் துறையின் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கால், மாநிலத்தில் கோடிக்கணக்கான எம்என்ஆர்இஜிஏ (MNREGA ) நிதி முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக, Enforcement Directorate அதாவது, அமலாக்க இயக்குநர் அகத்தின் ரேடாரில் வந்துள்ளார். பூஜா சிங்கால் வீடும், வேறு பல இடங்களிலும் ஏஜென்சி சமீபத்தில் சோதனை நடத்தியது. 

அதில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, ராஞ்சியில், கடந்த வெள்ளிக்கிழமை சோதனை செய்யப்பட்ட இரண்டு இடங்களில் இருந்து, மொத்தம் 19.31 கோடி ரூபாய் பணத்தை ஏஜென்சி கைப்பற்றியது என தெரியவந்துள்ளது. ராஞ்சியைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் மற்றும் நிதி ஆலோசகர் ஒருவரின் வளாகத்தில் இருந்து சுமார் 17.51 ​​கோடி ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கும், பூஜா சிங்கால் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடைபெற்று வருகிறது. நகரின் மற்றொரு இடத்தில் இருந்து சுமார் 1.8 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கால் யார்? அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்:

பூஜா சிங்கால் 2000 பேட்ச்-சைச் சேர்ந்த IAS அதிகாரி ஆவார். ஜார்கண்ட் சுரங்கத் துறையின் செயலாளராக மற்றும், ஜார்கண்ட் மாநில கனிம வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணி புரியும் இவர், இதற்கு முன், குந்தி மாவட்டத்தில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜா சிங்கால் ராஞ்சியின் பல்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் மற்றும் எம்.டி.யுமான அபிஷேக் ஜாவை மணந்தார். ஆனால், இந்த திருமணத்திற்கு முன்பு இவர், ஐஏஎஸ் அதிகாரி ராகுல் பூர்வாரை திருமணம் செய்து கொண்டார் என்றும் ஒரு சில தகவல்கள் கூறுகின்றன.

17.79 கோடி ரூபாய் சொத்து மீட்கப்பட்ட சிஏ சுமன் குமார் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சுமன் கிமனுக்கு பூஜா சிங்கால் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்பு இருப்பதாக Enforcement Directorate, அதாவது அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பூஜா சிங்கால் மீதான புகாரில், தேசிய வனவிலங்கு வாரியத்திடம் இருந்து வனவிலங்கு அனுமதியைப் பெறாமல் சட்டவிரோதமாக தனது 'கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள்' மூலம் பச்சதுமார் (Pachadumar) மணல் குவாரியை இயக்க ஐஏஎஸ் அதிகாரி அனுமதித்ததாகக் கூறப்பட்டது.

இன்று இணையத்தில் அதிகமாக பேசப்படுபவர் இவர் தான் என்ற நிலையில், இவர் குறித்த விசாரணைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெலியிடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.