நரிக்குறவர்களை பற்றி யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்

நரிக்குறவர்களை பற்றி யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்

நரிக்குறவர் எனப்படுவோர், தமிழ்நாட்டில் வந்தேறிய நாடோடி பழங்குடி சமூகம் ஆகும்.
முதலில் மலை சாரல் பகுதிகளில் வாழ்ந்த இவர்கள், உண்டிகோலால் குருவி அடிப்பது, நரியை பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.  பின்னர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மணிகள் தயாரித்தல் மற்றும் அதனை விற்பனை செய்தல் போன்ற மாற்றுத் தொழிலையும் செய்து வருகின்றனர்.
 
இவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு அற்றவர்களாக இருப்பினும், வேற்று சமூகப் பெண்களைக் கிண்டல் கேலி செய்வதில்லை... பார்ப்பதற்கு சுகாதாரமற்றவர்களாக இருப்பின், இவர்களின்  உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உட்கொள்ளும் நாட்டுமருந்துகள் வாழையடி வாழையாக ஆரோக்கியமானதாகவும்,  சுகாதாரமானதாகவும் இருக்கும் என்பது உண்மை.

இந்த சமூகத்தை பொருத்தவரை பிறந்ததிலிருந்தே ஆண்கள் துப்பாக்கிச்  சுடுவதிலும், கவண் வில்லிலும் திறமை மிக்கவர்களாகவும், பெண்கள் கலை வேலைப்பாடுகளில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

எங்காவது மருத்துவமனையில் ஒரு நரிக்குறவரை பார்த்துள்ளீர்களா..!? மருத்துவமனைக்கு செல்ல மாட்டார்கள், அவர்களே கைவைத்தியம் செய்து கொள்வார்கள். இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்களாக நரிகுறவர்கள் இருப்பதற்கான காரணம் இயற்கையோடு ஒத்து வாழ்வது தான்.

குறிப்பாக நரிக்குற சமூகத்தினரின் பிறப்பும், இறப்பும் ரகசியமாகவே இருக்கும்...பிறப்பு என்பது அவர்கள் வசிப்பிடத்திலே நடக்கும் ஒரு கொண்டாட்டம்... அதிலும் நாடோடி சமுகம் என்பதால் எந்த ஊரில் குழந்தை பிறக்கிறதோ, அந்த ஊரின் பெயரையே குழந்தைக்கு பெயராக வைப்பார்கள் என்ற தகவல்களும் பரவலாக பேசப்படுகிறது.

இறப்பு என்பது அமைதியாகவும் எந்தவித ஆராவராமும் இல்லாமல் வசிப்பிடத்திலே நடக்கும் ஒரு நிகழ்வு. பொதுவாக இந்த சமூகத்தினர்கள் இளவயதிலேயோ, இதய நோயாலோ மரணமடைவதில்லை, முதுமை காரணங்களால் மட்டுமே இயற்கை எய்கின்றனர்.

அந்த குடியிருப்பில் இருக்கும் ஒருவர் இறந்து போனால், வசிப்பிடத்திலே குழிதோண்டி புதைத்து விட்டு மேலே பானைகளை உடைத்து போட்டு 3 நாட்களில் அங்கேயிருந்து  இரவோடு இரவாக வேறிடம் சென்று விடுவார்கள் என்று பேசப்படுகிறது.

இவ்வாறாக தங்களுக்கென ஒரு வாழ்க்கை முறையை வகுத்து வாழ்ந்து வந்த இந்த சமூகத்தினர், தற்போது சற்று முன்னேறி வருகிறது.

நரிக்குறவ சமூகத்தினரின் வாரிசுகளை அரசுபள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றார்கள்..  அவர்களும் நவீன உலகில் அடியெடுத்து வைத்து நடை, உடை, பாவனைகளை மாற்றி சமூக தொழில்களை தவிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் பொம்மைகள், மணிகள் போன்றவை விற்பனை செய்து வருகின்றனர்.

இன்னமும் தனி மனித ஒழுக்கம் என்பது அவர்களிடையே அதிகம் காணப்படுகின்றது... அவர்களுக்குள் வகுத்துக் கொண்ட வாழ்வியல் விதி முறைகளை மட்டும்  அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை.. சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்து வாழ்கின்றார்கள்.