இலங்கையின் இடைக்கால அதிபர்!

இலங்கையில் மக்கள் போராட்டத்தினால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து இலங்கையின் இடைக்கால அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் இடைக்கால அதிபர்!

இலங்கையின் நிதி நெருக்கடி:

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. சீனாவிடம் வாங்கிய கடனை சரியான முறையில் முதலீடு செய்யாதது, தேவையற்ற வரி குறைப்பு, கொரோனா தொற்றின் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வருமானம் குறைவு, முக்கிய ஏற்றுமதி பொருளான தேயிலை கொரோனா கட்டுப்பாடுகளால் ஏற்றுமதி செய்யமுடியாமல் போனது மற்றும் மிக முக்கியமாக குடும்ப அரசியல் என பல காரணங்கள் இங்கையின் தற்போதைய வீழ்ச்சிக்கு காரணமாக சொல்லப்படுகின்றது.

அத்தியாவசிய பொருட்கள் முதல் எரிபொருள் வரை:

இலங்கையின் நிதி நிலைமை மோசமடைந்து உள்ளதால் அங்கு பால், அரிசி என அத்தியாவசிய பொருட்கள் முதல் உயிர்காக்கும் மருந்து பொருள்கள் வரை அனைத்திற்கும் தட்டுபாடு நிலவுகிறது. அதன் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளதால் சாதாரண மக்கள் அதை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

மகிந்த ராஜபக்சே ராஜினாமா:

அரசிடம் காகிதம் வாங்க நிதி இல்லாததால் மாணவர்களின் தேர்வுகள் ரத்து, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு ரத்து, எரிபொருள் இல்லாததால் பொது போக்குவரத்து ரத்து, என அரசின் பல செயல்களால் அதிருப்தி அடைந்த மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடத்திய போராட்டத்தால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தவிர அவரின் குடும்பத்தினர் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

ரணில் விக்ரம சிங்கே:

பின்னர், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றார். புதிய பிரதமர் வந்த பிறகேனும் நாட்டின் நிலைமை மாறும் என எதிர்பார்த்து இருந்த பொது, நாட்டின் நிலைமை இன்னும் மோசனமானது. நாட்டின் இந்த நிலையில் இருந்து மீள நாட்டுமக்கள் பல தியாகங்கள் செய்ய வேண்டும்  எனக் குறி இருந்தார் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே.மின் வெட்டு 15 நேரமானது. எரிபொருள் தட்டுப்பாட்டால் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே அளவிற்கு அதிகமான கடன் வாங்கி உள்ளதால் உலக வங்கியும் இலங்கைக்கு கடன் வழங்க மறுத்து விட்டது.  

மக்கள் போராட்டம்:

இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் இலங்கைக்கு உணவு பொருட்களையும், எரிபொருளை கொடுத்து உதவி வந்த நிலையில், பொருளாதார நிலைமையை சமாளிக்க முடியாமல் துயரப்பட்ட மக்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த மக்கள் அதை தங்கள் வசம் கொண்டு வந்தனர். பிரதமரின் வீடு எரிக்கப்பட்டது. 

அதிபர் ராஜினாமா:

புதிய பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதிபரும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதிபர் நாட்டை விட்டே சென்று விட்டார், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார் என்றும் சொல்லப்பட்டது. ஜூலை 13 ஆம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை அதிகாப்பூர்வமாக ராஜினாமா செய்வார் என சொல்லப்பட்டுள்ளது.

இலங்கையின் இடைக்கால அதிபர்:

இந்த நிலையில் நேற்று கூடி ஆலசோனை மேற்கொண்ட எதிர்கட்சிகள், எதிர்கட்சிகள் இணைந்து அரசை நடத்துவோம் எனவும் முடிவு செய்து, ஜூலை 20 ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என அறிவித்தனர்.

இலங்கையின் எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா, தானும் தனது கட்சியும் நாட்டின் தற்போதைய நிலைமையை சரி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதன் பின்னர் நாட்டின் இடைக்கால அதிபராக சஜித் பிரேமதாசாவை நியமிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.