காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி சாத்தியமா?!!!

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி சாத்தியமா?!!!

ஆளுங்கட் சியினால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டத்தில் எதிர்க்கட் சிகள் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மண்டல கவுன் சில் கூட்டம்:

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சர்வதேச ஆள்கடத்தலை யுஏபிஏவின் கீழ் கொண்டு வருவது குறித்தும், என்ஐஏ விசாரணையை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கியத்துவம் என்ன?:

உள்துறை அமைச்சர் ஷா தலைமையில் நடக்கவிருக்கும் கிழக்கு மண்டல கவுன் சில் கூட்டம் மிகவும் முக்கியமானது. சமீபகாலமாக, அதிகரித்து வரும் கடத்தல் வழக்குகள், குறிப்பாக போதைப்பொருள் கடத்தல், மத்திய அர சின் கவலையை அதிகரித்துள்ளது. 

நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சர்வதேச கும்பலுடன் தொடர்பு கொண்ட கடத்தல் வழக்குகளை UAPA சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இது தவிர, அதை விசாரிக்கும் உரிமையை என்ஐஏ பெற வேண்டும் எனவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  

கூட்டத்தில், மத்திய அர சின் இந்த ஆலோசனையின் மீது மாநிலங்களின் கருத்தை அறிந்து கொள்ள இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையுமா எதிர்க்கட் சிகள்:

இந்த சந்திப்பின் போது எதிர்க்கட் சிகளின் தலைவர்களான மமதா பானர்ஜி மற்றும் நவீன் பட்நாயக்கை நிதிஷ் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தளக் கட் சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட் சிகளை ஒன்றிணைப்பதற்கு மமதா பானர்ஜி ஆதரவாக இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

ஐக்கிய ஜனதா தளமானது தே சிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்ட பிறகு, நிதிஷ், நவீன், மமதா ஆகியோர் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறை.

மம்தா, கே. சி.ஆர், கெஜ்ரிவால் நிலைப்பாடு:

வங்காள முதலமைச்சர் மமதா, தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காங்கிரஸுடன் எதிர்க்கட் சிகளை இணைப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளனர்.  தே சிய அளவில் தன்னை மேம்படுத்த கே சிஆர் தனி பிரசாரத்தை நடத்தி வருகிறார். கெஜ்ரிவாலும் அதையேதான் செய்கிறார். 

மேலும் தெரிந்துகொள்க:   எதிர்க்கட் சிகளுடன் ஒன்றிணையாத ஜெகன்மோகன், நவீன், மாயாவதி!!! காரணம் என்ன??

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட் சி கூட்டணி:

இந்த இரு தலைவர்களும் மமதாவைப் போலவே காங்கிரஸ் கட் சியுடன் இணையாமல் பாஜக அல்லாத எதிர்க்கட் சிகளை ஒன்றிணைக்கவே விரும்புகிறார்கள்.  இத்தகைய சூழ்நிலையில் மமதா, பட்நாயக் உடனனான நிதிஷ்ஷின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    சிவசேனாவை பிரித்த ஷிண்டே அணியில் பிளவா?!! கட் சியை காப்பாற்ற ஷிண்டே என்ன செய்யபோகிறார்?!!