கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள தயாராகிறதா தமிழக அரசு? சுகாதாரத்துறையின் திட்டம் என்ன?

கொரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை யொட்டி தமிழகம் முழுவதும் வட்டார அளவில் கட்டளை மையம் உருவாக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள தயாராகிறதா தமிழக அரசு? சுகாதாரத்துறையின் திட்டம் என்ன?

கொரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை யொட்டி தமிழகம் முழுவதும் வட்டார அளவில் கட்டளை மையம் உருவாக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் இரண்டாம் அறை உச்சத்தில் இருந்த பொழுது முதல் முறையாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் கட்டளை மையம் (வார் ரூம்) உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டத்திலும் பொதுமக்களின் தேவைக்காக ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை தமிழக அரசு தொடங்கப்பட்டது. 

இந்த நிலையில் தற்பொழுது 2 ஆம் அலையின் தாக்கம் குறைந்து வரகூடிய சூழலில் தமிழகத்தில் கொரொனா 3 ஆம் அலை  வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் 3ஆம்  அலைக்கு வருவதற்கு முன்பாக அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக  வட்டார அளவில் ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் 3வது அலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக தற்போது உள்ள மருத்துவ கட்டமைப்புகளை அப்படியே தொடர முடிவு செய்துள்ளது. மேலும், கொரோனா தொற்று தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் 2வது அலையில் பொதுமக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து ஒருங்கிணைந்த கட்டளை மையம் திட்டத்தை வட்டார அளவில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.