"இது சுதந்திரத்திற்கான போராட்டம், வரவிருக்கும் எதிர்காலத்திற்கான கடந்த காலத்துக்கான சுதந்திரம்."

 "இது சுதந்திரத்திற்கான போராட்டம், வரவிருக்கும் எதிர்காலத்திற்கான கடந்த காலத்துக்கான சுதந்திரம்."

 "இந்திய ராணுவ வீரன் ஒருவனாவது போர்க்களத்தில் கோழையாக நடந்து கொண்டது உண்டா? இல்லை....” தளபதி முன்வந்து மரணத்தை எதிர்கொள்ளாவிட்டால், சாதாரண படை வீரர்கள் போரிடுவார்களா, என்ன? - சுவாமி விவேகானந்தர்.

இரண்டாம் சுதந்திரப்போர்:

தென்பகுதியில் போடப்பட்ட சுதந்திரப்போர் என்னும் விதை 40 வருடங்களுக்கு பிறகு வடபகுதிகளில் விருட்சமாக முளைக்க ஆரம்பித்தது.  இரண்டு நாள்களுக்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டிருந்த புரட்சி சில துரோகிகளால் முன்கூட்டியே ஆங்கிலேயர்களுக்கு தெரிய வந்த காரணத்தால் சிப்பாய்கள் உடனடி புரட்சியில் ஈடுப்பட்டனர்.  திட்டமிடப்பட்ட தினத்துக்கு முன்னரே நடந்த காரணத்தால் ஆங்கிலேயர் கலக்கமுற்றனர்.  பல பகுதிகளை மாகாண ஆட்சியாளர்கள் கைப்பற்றினர்.  பல ஆங்கிலேய தளபதிகள் கொல்லப்பட்டனர்.  

தோட்டா வடிவில் வந்த எதிரி:

புரட்சிக்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும் மத நம்பிக்கைக்கு எதிரான திட்டமே புரட்சிக்கு முக்கிய காரணம்.  புதிய ரக துப்பாக்கியை உபயோகிக்க மாட்டோம் என மறுத்த மங்கள் பாண்டே  "இன்று வரை நீங்கள் எங்கள் விசுவாசத்தைப் பார்த்தீர்கள், இப்போது நீங்கள் எங்கள் கோபத்தைப் பார்ப்பீர்கள்" எனக் கூறி உயர் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.  ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படும் தருவாயிலும்  "இது சுதந்திரத்திற்கான போராட்டம், வரவிருக்கும் எதிர்காலத்திற்கான கடந்த காலத்துக்கான சுதந்திரம்." எனக் கூறியே வீர மரணமடைந்தார் பாண்டே.

வீரமிக்க புரட்சியாளர்கள்:

இரண்டாம் சுதந்திர போரில் ஜான்சி ராணி, தாந்தியே தோபே போன்ற பல வீரமிக்க ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர்.  ஜான்சியின் ராணி தன் முதுகில் குழந்தையை கட்டிக் கொண்டு "என் ஜான்சியை நான் ஒப்படைக்க மாட்டேன்" என்ற முழக்கத்துடன் போரிட்டார்.  "போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டால், நாம் நிச்சயமாக நித்திய புகழையும் இரட்சிப்பையும் பெறுவோம்" என தன் படைவீரர்களை ஊக்கப்படுத்தி போரில் ஜான்சியையும் கைப்பற்றினார்.  

குறுகிய காலப் போர்:

விரைவிலேயே போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.  விரைவாக நிலைமையை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் அவர்களின் தொழில்நுட்பத்தால் பெரும் படையை திரட்டி புரட்சியில் ஈடுபட்ட வீரர்களை ஒடுக்கினர்.  இரண்டு நாட்களில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.  வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர் சிலர் சிறையிலடைக்கப்பட்டனர்.  பின்னாளில் அவர்களில் சிலருக்கே விடுதலை அளிக்கப்பட்டது.  பலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

தலைமையற்ற போர்:

இரண்டாம் சுதந்திர போர் தோல்வியுற்றதற்கான காரணங்களை ‘என் பயணம்’ என்ற நூலில் சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.  "..இந்திய ராணுவ வீரன் ஒருவனாவது போர்க்களத்தில் கோழையாக நடந்து கொண்டது உண்டா? இல்லை.” அப்படியெனில் இந்த போரில் வீரர்கள் தோற்க காரணம் என்ன என ஆராய்ந்தபோது புரட்சியின் போது களத்தில் இருந்த ஆங்கிலேய தளபதியான ஸ்ட்ராங்க் என்பவரிடம் நான்  ”போதிய அளவுக்கு பீரங்கிகள், வெடிமருந்துகள், தேவையான பொருள்களுடன்  பயிற்சி பெற்ற சிறந்த  போர்வீரர்கள் இருந்தும் சிப்பாய்கள் ஏன் தோல்வி அடைந்தார்கள்” என்று ஒருநாள் நான் அவரிடம் கேட்டபோது, “ தளபதிகள் தலைமை தாங்கி முன்னே செல்லாமல், வீரர்களுக்கே பின்னால் ஒளிந்து கொண்டு , ’வீரர்களே! முன்னேறுங்கள், தாக்குங்கள்’ என ஆணை மட்டுமே பிறப்பித்துக் கொண்டிருந்தனர்.” 

திட்டமற்ற செயல்பாடு:

தளபதிகள் அல்லது தலைமை ஏற்பவர்கள் ஈடுபாடற்ற செயல்பாடே தோல்விக்கான முக்கிய காரணம் என்றாலும் ஒவ்வொரு மாகாணங்களிலும் புரட்சியில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் அவர்கள் பகுதிகளை கைப்பற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட்டனர்.  புரட்சியாளர்களை ஒருங்கிணைக்க யாரும் முன் வரவில்லை.  மேலும் திட்டமிடப்பட்ட நாளுக்கு முன்னரே புரட்சி தொடங்கியது.  திட்டமற்ற செயல்பாடே தோல்வியை தந்தது.

முடியாட்சியின் கீழ்:

இரண்டாம் சுதந்திரப் போரினால் வணிகர்களின் கீழ் இருந்த ஆட்சி தற்போது இங்கிலாந்தின் முடியாட்சியின் கீழ் வந்தது.  ஆங்கிலேயர்களுக்கு காலனிய இந்தியாவின் மீது இருந்த நம்பிக்கை இல்லாமல் போனது.  ஆங்கிலேய படையில் இருந்த இந்திய வீரர்களின் எண்ணைக்கை பெருமளவு குறைக்கப்பட்டது.  இதனால் வேலையிழந்த வீரர்கள் வழிப்பறியில் ஈடுப்பட்டனர்.  கள்ளர்கள் என்ற பெரும் இனம் உருவானது.

இங்கிலாந்து முடியாட்சியின் கீழ் ஒருங்கிணைக்கப்படாத இந்தியாவின் நிலை என்ன? மக்கள் போற்றிப் பாதுகாக்கப் பட்டனரா?  மக்களின் வாழ்க்கை நிலை தரம் உயர்த்தப்பட்டதா?  இல்லை மேலும் தரம் தாழ்ந்ததா என்பதை மற்றுமொரு கோணத்தில் அடுத்த பகுதியில் காணலாம்.