அதிமுகவை இழுத்த ஜெயக்குமார்..! பெயர் பலகைக்காக தான் இந்த அவசரமா?

அதிமுகவை இழுத்த ஜெயக்குமார்..! பெயர் பலகைக்காக தான் இந்த அவசரமா?

தமிழ்நாடு மாநிலத்தேர்தல் ஆணையம் நடத்தும்  அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் அதிமுக பெயர்பலகைக்கு போட்டி.

அனைத்துகட்சிக் கூட்டம்:

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆணைப் பிறப்பித்ததை அடுத்து, அங்கீகரிக்கப்பட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன்  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் தொடங்கியுள்ளது .


கேட்டு பெற்ற ஓபிஎஸ் :

அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு ஜூலை 30 ஆம் தேதி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக அதிமுக தரப்பில் எப்படி பழனிசாமிக்கு மட்டும் அழைப்பு கடிதம் அனுப்பட்டு இருந்த நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என, நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம்  கோரிக்கையை ஏற்று, அவருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

அதிமுக பிரதிநிதிகள்:

ஈபிஎஸ் தரப்பில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோரும், ஓபிஎஸ் தரப்பில் இருந்து, தற்போதைய எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

முதல் ஆளாக கோவை செல்வராஜ்:

ஓபிஎஸ் தரப்பு பிரதிநிதியான கோவை செல்வராஜ், கூட்டத்திற்கு முதல் ஆளாக சென்று அமர்ந்தார்.

அதிமுக பெயர் பலகைக்கு போட்டி:

பின்னர் வந்த ஈபிஎஸ் ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவை செல்வராஜ் முன்பு இருந்த அதிமுக பெயர் பலகையை தன் முன் எடுத்து வைத்துக்கொண்டார்.

அதிமுக பெயர்பலகைக் கூட ஓபிஎஸ் தரப்பினரிடம் இருக்கக்கூடாதா? அதிமுகவின் உண்மை பிரதிநிதி தாங்கள் தான் எனக் காட்டி கொள்வதற்காக ஜெயக்குமார் இப்படி செய்தாரா என சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.