பாதையை மாற்றும் ஓபிஎஸ் - நெருக்கடியில் ஈபிஎஸ்..! ஓபிஎஸ்க்கு கை கொடுக்குமா சட்ட போரட்டம்?

பாதையை மாற்றும் ஓபிஎஸ் - நெருக்கடியில் ஈபிஎஸ்..! ஓபிஎஸ்க்கு கை கொடுக்குமா சட்ட போரட்டம்?

அதிமுக பொதுக்குழு முதல் பல்வேறு சட்ட வழக்குகள் இபிஎஸ்க்கு சாதகமாகி வருகின்றதா என கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கு:

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மனு மீதான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு,  உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு, தற்போது மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க: தொடரும் சட்ட போராட்டம்..! நீதிமன்றத்தை நம்பி உள்ள ஓபிஎஸ்..!

நீதிபதி மாற்றம்:

அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரிய வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கை விசாரிக்கும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்றவேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு ஆகஸ்ட் 4 அன்றுநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கால அவகாசம் கேட்டு ஓபிஎஸ் தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டது.

மலிவான செயல்:

அதற்கான கரணம் கேட்கப்பட்ட போது, நீதிபதி மாற்றம் செய்யக்கோரி மனு அளித்துள்ளோம், அதற்காக கால அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இது மலிவான செயல் என்றும், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் சாடினார். மேலும், அதிருப்தி ஏதேனும் இருந்தால் தன்னிடம் வந்து முறையிட்டு இருக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

நீதிபதி மாற்றப்படுவாரா?

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், ஓபிஎஸ் இன் மனு ஏற்கப்பட்டு நீதிபதி மாட்டப்படுவாரா?  என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் வலுத்து வருகிறது. 

மேலும் படிக்க: இனி அரசியலில் இருக்கும் வரை... மின்சாரத்துறை பற்றி பேசமாட்டேன் - அண்ணாமலை!

இபிஎஸ்க்கு சாதகம்:

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கு மற்றும் ஓபிஎஸ் தொடரும் அனைத்து மேல் முறையீடு வழக்குகளும் இபிஎஸ்க்கு சாதகவே அமைந்து வருவதை பார்க்க முடிகிறது. ஓபிஎஸ் பொதுக்குழுவை நாடாமல் அனைத்திற்கும் நீதிமன்றத்தை நடுவது சரி அல்ல என்று, உயர்நீதிமன்றம் கூறி இருக்கும் நிலையில், சட்ட போராட்டங்கள் ஓபிஎஸ்க்கு கை கொடுக்குமா என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்கள் முன் வைத்து வருகின்றனர்