எம்.எல்.ஏ உதயநிதியை பாராட்டி தள்ளிய நடிகை கஸ்தூரி! அப்படி என்ன செய்தார் உதயநிதி?

எம்.எல்.ஏ உதயநிதியை பாராட்டி தள்ளிய நடிகை கஸ்தூரி! அப்படி என்ன செய்தார் உதயநிதி?

சென்னை திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வான உதயநிதி ஸ்டாலினையும் அவரது தந்தையுமான தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நடிகை கஸ்தூரி பாராட்டியுள்ளார்.

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினிடம், உன் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நல்லது செய் என அவரது தந்தையும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை கெட்டியாக பிடித்துக்கொண்ட உதயநிதி அன்றில் இருந்து இன்று வரை தொகுதி முழுவதும் ஒரு ரவுண்டு அடித்து வருகிறார். அனைவரிடமும் சிரித்த முகத்துடன் பேசும் அவர், ஒவ்வொரு தெருவிற்கும் சென்று பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் வழக்கம்போல் எம்.எல்.ஏ உதயநிதி மேற்கொண்ட ஆய்வின் போது திடீரென ஜெயலலிதா ஆரம்பித்த அம்மா உணவகத்திற்குள் நுழைந்தார். அங்கு உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் வியப்புடன் பார்க்க, நேரடியாக சமையல் அறைக்கு சென்ற அவர், உணவும் நன்றாக உள்ளதா எனவும் சுகாதாரமாக உள்ளதா என்பதையும் சாப்பிட்டே ஆய்வுசெய்து அதிரடிகாட்டினார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மேலும் அதிமுக தொடங்கிய அம்மா உணவகத்தில் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஆய்வு மேற்கொண்டது மட்டுமல்லாமல், அதனை சாப்பிடவும் செய்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, கற்பனையில் கூட நம்பியிருக்க மாட்டேன், நடக்கிறது .  கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் தலைவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு  தந்தையும் மகனும் எடுத்துக்காட்டாய் செயல்படுகிறார்கள். வாழ்த்த சந்தோஷமாக இருக்கிறது. Planned publicity என்றாலும் கூட நல்ல விஷயம். என்னை போன்ற முரணாளர்களை  திரும்பி பார்க்க வைத்தால் அது கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயமே. அரசியல் முதிர்ச்சி தலைவர்களுக்கு மட்டுமே போல இங்கு வந்து வாந்தியெடுக்கும் ஒன்றிய உயிரினங்கள் திமுக  தலைவர்களை பின்பற்றினால் தேவலாம் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.