மஹாராஷ்டிரா : சட்டமன்றத்திற்கு வருகை தந்த ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள்..!

அவைத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.!

மஹாராஷ்டிரா : சட்டமன்றத்திற்கு வருகை தந்த ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள்..!

கோவாவில் இருந்து வந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், மும்பை சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு எழுந்ததை அடுத்து அவர் பதவி விலகினார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். இந்த நிலையில், மகராஷ்டிராவில் புதிய அரசு நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இதற்காக கோவாவில் தங்க வைக்கப்பட்டிருந்த தமது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை ஏக்நாத் ஷிண்டே மும்பை வரவைத்துள்ளார். 

அவைத்தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி...

அதன்படி ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், மும்பையில் உள்ள சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்கிடையில், சிவசேனாவில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைக்காக ஷிண்டேவை, அதன் தலைவர் உத்தவ் தாக்கரே நீக்கியுள்ளார். இதனால் மகாராஷ்டிர அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.