பப்ஜி விளையாடாமா போய் படிங்க... சைபர் கிரைம் கட்டுக்குள் வந்த மதனின் இன்ஸ்டா பேஜில் பதிவு!

பப்ஜி மதனின் இன்ஸ்டா பக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள சைபர் கிரைம் போலீசார், பப்ஜியை விடுத்து படிப்பில் கவனம் செலுத்துமாறு மாணவர்களை அறிவுறுத்தி வருகின்றனர். 

பப்ஜி விளையாடாமா போய் படிங்க...  சைபர் கிரைம் கட்டுக்குள் வந்த மதனின் இன்ஸ்டா பேஜில் பதிவு!

பப்ஜி மதனின் இன்ஸ்டா பக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள சைபர் கிரைம் போலீசார், பப்ஜியை விடுத்து படிப்பில் கவனம் செலுத்துமாறு மாணவர்களை அறிவுறுத்தி வருகின்றனர். 

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூ-டியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்து, பெண்கள் குறித்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி வந்த மதன், பல ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாக கூறி பண மோசடியிலும் ஈடுபட்டார். இந்த நிலையில், 4 பிரிவுகளின் கீழ் மதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும், அவரது மனைவி கிருத்திகாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், மதனின் வங்கிக் கணக்குகளை முடக்கி, அவரின் கார்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும்  சைபர் கிரைம்  போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் அறிவுரைகள் வழங்கியும், தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையையும் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சைபர் கிரைம் போலீசாரின் அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கை பதிவுகளை குறிவைத்து ஒருபுறம் மதனின் ரசிகர் பட்டாளம் நக்கலடித்து வந்தாலும், சில இளைஞர்கள், தவறான பாதையில் சென்ற தங்களின் கண்களை திறந்துவிட்டது போலீஸ் என்பது போல் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மற்றொரு புறம் பலரும் பப்ஜி-யை விடுத்து படிப்பில் கவனம் செலுத்துவதாகவும், தங்களை சரியான முறையில் வழிகாட்டிய காவல் துறையினருக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.