கோவா இளைஞர்களின் ஹீரோவான பிடிஆர்... ஹார்ட் சிம்பள் போட்டு வருத்தம் தெரிவித்த அமைச்சர்!!

தான் எத்தனையோ லட்சம் மைல்களை தாண்டி, 6 கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் ஆனால் மக்கள் தன்னை பெரிதும் விரும்பும் கோவாவுக்கு இதுவரை செல்லாதது வருத்தமாக உள்ளதாக தமிழக நிதி அமைச்சர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கோவா இளைஞர்களின் ஹீரோவான பிடிஆர்... ஹார்ட் சிம்பள் போட்டு வருத்தம் தெரிவித்த அமைச்சர்!!
தமிழகத்தில் உள்ள அமைச்சர்களில் தற்போது தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதற்க்கு காரணம் பாஜகவை தனது கேள்விகளாலும், நறுக் நறுக்கென்று அவர்களுக்கு பதிலடி கொடுப்பதிலும் பிடிஆரை மிஞ்ச ஆளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மனுஷன் தெறிக்கவிடுவார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கோவா மாநிலத்தை பிடிஆர் அவமதித்ததாகவும் அதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் கேட்டு கொண்டார். ஆனால் பிடிஆர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடந்தது குறித்தும் தனது பேச்சு அனைத்து மாநிலங்களுக்குமானதாக இருந்தது குறித்தும் விளக்கம் அளித்தார். இந்த பேச்சுக்கு யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் கோவாவின் மாநில உரிமைக்காகவும் தான் பேசுகிறேன் என்று அவர் தெரிவித்தார். 
 
இதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பேசிய  பிடிஆர், ஒன்றிய அரசுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? வானத்தில் இருந்து வந்துவிடவில்லை. ஒன்றிய அரசுக்கு வரும் பணம் எல்லாம் மாநில அரசின் வரிதான். அதெல்லாம் மக்களின் பணம். குஜராத் முதல்வராக இருந்த போது மோடி சொன்னதைத்தான் நான் இப்போதும் சொல்கிறேன். இது ஒன்றிய அரசின் பணம் கிடையாது. இது மாநில அரசு வழங்கும் மக்களின் பணம். மக்களின் பணத்தை வசூலித்து மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. இதை யார் எப்படி செலவழித்தாலும் இது மக்களின் பணம் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். இவர்கள் என்னவோ தங்கள் பரம்பரை சொத்துக்களை மக்களுக்கு செலவு செய்வதைப்போல இருக்கிறதே. மக்களிடம் வாங்கிய பணத்தை, மாநிலங்களிடம் வாங்கிய பணத்தை முறையாக செலவு செய்யுங்கள். தடுப்பூசி போடுவதற்கு ஒழுங்காக செலவு செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஒன்றிய அரசுதான் உலகம் முழுக்க டெண்டர்களை விட்டு, அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.

 
பிடிஆரின் ஒத்த பேச்சு இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களால் கூகுளில் தேடப்பட்டார். அதேபோல பிடிஆர் யார் என்பது குறித்து கோவா மக்கள் தேடியதாகவும் செய்திகள் வெளியானது. அந்த செய்திகளை சுட்டிக் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உருக்கமான கருத்தை தெரிவித்தார். 

 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்; நான் இதுவரை விமானம் மூலமாகவும் சாலை மார்க்கமாகவும் பல லட்சக்கணக்கான மைல்களுக்கு சென்றுள்ளேன். இதுவரை 2,000 விமானங்களில் பயணம் செய்துள்ளேன். சில சமயத்தில் கன்கார்டு விமானத்திலும் (ஒலியை விட வேகமாக செல்லும் விமானம்) பயணம் செய்துள்ளேன். 6 கண்டங்களில் உள்ள 60 நாடுகள், அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களுக்கும் சென்றுள்ளேன். ஆனால் இன்று நான் ஒரு உண்மையை புரிந்து கொண்டுள்ளேன். நான் கிட்டதட்ட போதுமான தூரம் பயணம் செய்யவே இல்லை. ஆம், இதுவரை நான் கோவாவுக்கு சென்றதில்லை, அந்த மக்களுக்கு அன்பையும், நன்றிகளையும் ஹார்டின் சிம்பள் போட்டு தெரிவித்துள்ளார் பிடிஆர். 

தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலினின் சரியான தேர்வாக தமிழ்நாடு ஒரு நல்ல அறிவார்ந்த ஆளுமையான நிதிஅமைச்சரை பெற்றுள்ளது மகிழ்ச்சி அடைகிறேன். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை நிரூபித்துள்ளீர்கள். கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு ன்னு படித்திருக்கிறேன். ஆனா எங்க ஊருக்கு வராமலேயே சிறப்பு சேர்த்துவிட்டீர்களே. தங்கள் உடலும் உள்ளமும் ஆரோக்கியத்தின் உச்சத்தில் இருக்க வாழ்த்துகள் என பிடிஆர் குறித்து கோவா இளைஞர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.