போர், பழிவாங்குதல்..! மோடியின் கருத்துக்கு குவியும் உலக தலைவர்களின் ஆதரவு..! 

போர், பழிவாங்குதல்..! மோடியின் கருத்துக்கு குவியும் உலக தலைவர்களின் ஆதரவு..! 

பிரதமர் மோடியின் கருத்துக்கு உலக தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

உக்ரைன் - ரஷ்யா போர்:

உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷ்யா. 7 மாதங்கள் கடந்த பின்னரும் போர் இன்றும் நடைபெற்று வருகிறது. பல உலக நாடுகளின் பொருளாதார தடைகளையும் மீறி ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்தியா இரு நாடுகளுக்கும் நடுநிலையாக இருந்து பேச்சு வார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது வருகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு:

உஸ்பெகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, ரஷ்யா அதிபர் புதினிடம் போரை உடனடியாக நிறுத்தும்படி கோரியிருந்தார். மேலும் இது போருக்கோ, பழிவாங்குவதற்கோ உரிய தருணம் இல்லை எனவும் உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றியிருந்தார். 

மேலும் படிக்க: வென்டிலேட்டரில் சந்திரசேகர ராவ் அரசாங்கம்..! மகாராஷ்டிராவை அடுத்து தெலுங்கான குறிவைப்பு..?

இம்மானுவேல் மேக்ரான்:

இந்தநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா பொதுக்கூட்டத்தில் உக்ரைன்- ரஷ்யா போர் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடியின் கருத்தை சுட்டிக்காட்டி பேசிய பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக  மேற்குக்கு எதிராக பழிவாங்கவோ அல்லது கிழக்கிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளை எதிர்ப்பதோ சரியான தருணம் இல்லை என்றும், எதிர்கொள்ளும் சவால்களை நாடுகள் ஒன்றிணைந்து சமாளிக்க வேண்டிய நேரம் இது என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

அலெக்சாண்டர் ஸ்கலன்பெர்க் :

இதேபோல் போர் சூழலில்,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மோடி வழங்கிய செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது என ஆஸ்திரியா வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஸ்கலன்பெர்க் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த செயல்பாடு ஆஸ்திரியா மற்றும் ஐரோப்பா நாடுகளின் அரசியலில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

ஜேக் சல்லிவன்:

முன்னதாக நட்பு நாடான ரஷ்யாவிடம் போர் நிறுத்தத்தை முன்மொழிந்த  இந்தியாவின் செயலை வரவேற்ற அமெரிக்கவின் தேசிய ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரஷ்யா ஐநா விதிகளுக்கு கட்டுப்பட்டு பறிமுதல் செய்த நிலப்பரப்பை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.