மீசையில் மட்டுமல்ல முகத்திலும் மண் ஒட்டவில்லை..! என் வீட்டிற்கு சீல் வைக்கவே இல்லை..!

மதுவந்தியை வறுத்தெடுத்து வரும் நெட்டிசன்கள்..!

மீசையில் மட்டுமல்ல முகத்திலும் மண் ஒட்டவில்லை..! என் வீட்டிற்கு சீல் வைக்கவே இல்லை..!

வீட்டிற்காக வாங்கிய ஒரு கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் இழுத்தடித்து வந்த மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டதும், அதிகாரிகளிடம் மதுவந்தி கெஞ்சி கூத்தாடியதும் தான் இப்போது இணையங்களில் ஹாட் டாப்பிக்.. சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா என்ற அப்பார்ட்மென்ட்டில் ஒரு வேட்டை வாங்கியுள்ளார் பிரபல நடிகர் ஒய்ஜி மகேந்திராவின் மகளும், பாஜக செயற்குழு உறுப்பினருமான மதுவந்தி. பல வருடங்களாக அங்கு வசித்து வரும் அவர், அந்த வீட்டை வாங்குவதற்காக 2016-ல் இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார். வீட்டை வாங்கிய பிறகு சில மாதங்கள் மட்டும் வட்டி கட்டி வந்த அவர், அதன் பிறகு வட்டியும், தவணையும் கட்டவில்லை எனக் கூறப்படுகிறது. 

உரிய வட்டி பணத்தை கட்டுமாறு, பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக மதுவந்தியிடம் கேட்டும் அவர் பணத்தை கட்டாததால், நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதனையும் கண்டு கொள்ளாததால், அவர் மீது நிதி நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு, நீதிமன்றம் வீட்டை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டது. யார் அவரு? மூளை பலம் ஜாஸ்தி உள்ளவர் இல்லையா? எப்படி இதனை தன்னுடைய மூளை பலத்தால் எப்படியும் சமாளித்து காட்டுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அட ச்ச படுத்தே வீட்டானையா என்ற வடிவேலு காமெடிக்கேற்ப.. வீட்டிற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம் கெஞ்சி கூத்தாட்டினார் மதுவந்தி. உங்கள் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன் என அவர் கெஞ்சிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், இந்த வீடியோக்கு நெட்டிசன்கள் உட்பட பொதுமக்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை தற்போது பார்க்கலாம். பணம் இல்லை என்பதற்காக இப்படி எத்தனை மாணவர்களை அவமானப்படுத்தி வெளியேற்றி இருப்பார்கள் மதுவந்தியின் குடும்பத்தினர். அந்த வலியையும் வேதனையையும் அவமானத்தையும் இன்று உணர்ந்திருப்பார் மதுவந்தி என பலர் கூறியிருக்கின்றனர். 

எதோ ஜந்தன் மந்தன் அக்கவுண்ட்லா மோடி காசு போட்டிருக்கிறாரு சொன்னிங்களே அதை வைத்து கடனை அடைக்க வேண்டியதுதானே? நாங்க உங்களை இந்த நிலையிலும் அசிங்க படுத்துரேனு நினைக்காதிங்க, இங்கே லாக்டவுன் காலத்தில் நிறையப்பேரு என்னையும் உள்பட பாதிக்கப்பட்டு இருக்காங்கா அனால் நீங்க என்ன சொன்னிங்க மோடி பணம் போட்டிருக்கார், அதனால் மக்கள் மகிழ்ச்சியா இருக்காங்கன்னு சொன்னிங்க. முட்டு கொடுக்கிறது என்று ஒரு அளவு உண்டு, உங்களுடைய மூளை வலிமைதோற்று போயிருக்கு. இதுக்கு பெயர் கடைந்தெடுத்த​அயோக்கியத்தனம். இவர்களின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவது மிகவும் முக்கியமானது. பணம் இல்லாதவனுக்கு மனிதாபிமானம் காட்ட​ வேண்டியது நம் கடமை. ஆனால் கழுத்து வரைக்கும் பணம் இருந்தும் எளிமை வேடம் போட்டு அடுத்தவனை ஏமாற்றி மேலும் பணம் சேர்ப்பவர்களின் அயோக்கியத்தனங்கள் அம்பலப்பட​ வேண்டும் என பலர் கோபமடைந்துள்ளனர். மலம் அல்லுப்பவர்கள் மலம்தான் அல்ல வேண்டும் என்று திமிர் பேச்சு பேசினாயே மதுவந்தி, அந்த புனிதமானவர்களை பார்த்து. இன்று இந்த அதிகாரிகள் எந்தெந்த சாதி என்று தெரியாமல் கூட அவர்கள் காலில் விழுறேன் என்று சொல்கிறாயே? பார்த்தாயா உன் நிலைமையை இதுதான் வாழ்கை இனியாவது மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள் என பல அறிவுரை கூறியிருக்கின்றனர். 

மதவாந்தி நிலை என்ன?
ஹிந்துஜா பைனான்சியருக்கு 1.20 கோடி பணம் கட்ட முடியாமல் மதுவந்தி தவிப்பதாகவும் காலில் விழுவதாகவும் பரப்பப்படும் வீடியோ எதை காட்டுகிறது? கோடி கோடியாக சேர்த்து வைத்திருக்கும் பள்ளியின் அதிபர் மகளிடம் ஒரே ஒரு கோடி இல்லாமல் போய்விட்டது என்றா?
இல்லை...உயர்சாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையிலான சலுகைகள் கிடைக்கப்பெற வேண்டியவர் பட்டியலில் இவரையும் சேர்க்க வேண்டும் என்றா? வீடியோவை பரவ விடுவதே அவர்கள் தான். இதில் கேலி செய்து சிரிக்கவோ, ஆணவத்திற்கு அடிவிழுந்துவிட்டதாக ஆர்கஸம் அடையவோ ஒன்னுமில்லை. என கூறப்படுகிறது. 

இத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடந்தும் கூட, இவை எதுமே நடக்கவில்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறார் மதுவந்தி. இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வீடு சீல் வைப்பதாக வெளியாகும் செய்திகள் எல்லாம் பொய். அதை எல்லாம் உடனே நிறுத்துங்கள். எனக்கு அதிர்ச்சியாக, கோபமாக இருக்கிறது. இது தொடர்பாக பொய்யான செய்திகள் வெளியாகி வருகிறது என்று கோபமாக பதில் அளித்துள்ளார். அதாவது தனது வீடு சீல் வைக்கப்பட்ட செய்திகள் எல்லாம் பொய் என்று மறுத்துள்ளார்.ஆனால் அதே சமயம் இன்றுதான் வழக்கறிஞர் ஆணையரிடமும் வங்கி அதிகாரிகளிடமும் மதுவந்தி கெஞ்சும் வீடியோ வெளியானது. ப்ளீஸ் சார், வீட்டை லாக் செய்ய வேண்டாம். வீட்டிற்கு பூட்டு போட வேண்டும். ஐ பெக் யூ சார்.. அவமானமாக இருக்கும். நான் செக் கொடுத்துவிடுகிறேன். எனக்கு எஸ்பிஐயில் இருந்து பணம் வருகிறது என்று கூறும் வீடியோ வைரலாகி உள்ளது. வீட்டை சீல் வைக்கவில்லை என்று மதுவந்தி மறுத்த நிலையில்தான் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. அப்போ இந்த வீடியோவில் உள்ளது மதுவந்தியில் டூப்பா? அல்லது அட்மின்னா என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றன. குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என சொல்லி கேள்வி பட்டிருப்போம். ஆனால் இவர் நான் விழவேயில்லை எனக் கூறியிருப்பது அந்த அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இல்லை எனவும் கூறி வருகின்றனர்.